america

அம்­பாந்­தோட்டை துறை­மு­க விவகாரம் – அமெரிக்கா அறிக்கை!

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை பல­வந்­த­மாக தன் வசம் வைத்­துக்­கொள்­வ­தற்கு சீனா நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. மேலும் பிராந்­தி­யத்தின் வலு­வான நாடாக மாறு­வ­தற்கும் தமது இரா­ணுவ பலத்தை வெளி­நா­டு­க­ளுக்கு திணிப்­ப­தற்கும் சீனா முற்­ப­டு­வ­தாக அமெ­ரிக்­காவின் பாது­காப்பு நிறு­வ­ன­மான பென்­டகன், காங்­கிரஸ் சபையில் சமர்ப்­பித்த பூரண அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

பிராந்­தி­யத்தின் வலு­வான நாடாக மாறு­வ­தற்­கான சீனா முன்­னெ­டுத்­துள்ள திட்­டங்கள் தொடர்பில் குறித்த அறிக்­கையில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதன்­படி இரா­ணுவ தளங்­களை அமைப்­ப­தற்­காக சீனா செயற்­பட்டு வரு­கின்­றது. கடந்த வருடம் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை தன்­வசம் பல­வந்­த­மாக சுவீ­க­ரிக்க முற்­பட்­டுள்­ளது.

இலங்­கையை போன்று பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளையும் சீனா தன்­வசம் வைத்­துக்­கொள்ள முயற்­சிப்­ப­தாக அமெ­ரிக்கா பென்­டகன் நிறு­வ­னத்தில் அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

எனினும் சீனா பாது­காப்பு அமைச்சு இந்த அறிக்­கையை பூர­ண­மாக நிரா­க­ரித்­துள்­ளது. குளிர்கால யுத்த மனநிலையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*