ddd

தமிழர் மனதில் வெறுப்பை ஊட்டும் போர் வெற்றிச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!

இலங்கை படையினரின் கடந்த கால வெற்றிகளை நினைவுகூரும் விதத்தில் பொது இடங்களிலும் சந்திகளிலும் யுத்தவெற்றிச் சின்னங்கள் காட்சிப்படுத்பட்டிருக்கின்றமை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மனங்களை ஆற்றுப்படுத்துவனவாக இல்லை.

அதற்கு மாறாக கடந்த காலங்களில் தம்மீது இழைக்கப்பட்ட கொடுமைகள் தாம் எதிர்கொண்ட ஆற்றொணா துன்ப துயரங்களை மீள நினைப்பூட்டி அவர்கள் மனக்காயங்களை மேலும் சீண்டி நோகப் பண்ணுபவையாகவே உள்ளன.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியிருக்கன்றார் வடக்கு முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்.

இந்தப் போர் வெற்றிச் சின்னங்கள் தமிழ் மக்கள் மனதில் வெறுப்பையும் இனவாத எண்ணங்களையுமே தூண்டுகின்றன.

இங்குள்ள பிரதான இனங்கள், சமூகங்கள் இடையே ஐக்கியம் புரிந்துணர்வு நல்லிணக்களம், அமைதி போன்றவற்றை உருவாக்குவதற்கு இத்தகைய போக்குகள் உதவப் போவதேயில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் மனங்களை வென்று, தமிழர்கள் சிங்களவர்கள் மற்றும் ஏனையோரிடையே பரஸ்பரம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு, இவ்வாறு பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் யுத்த வெற்றிச் சின்னங்களைக் காட்சிப்படுத்துகின்றமையை நிறுத்துவதே நல்ல ஆலோசனையாக இருக்கமுடியும்.

தேவையானால் அத்தகையக நினைவுச் சின்னங்களில் விவரத் தொகுப்பை – பட்டியலை – உங்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.

நாட்டின் நலன் கருதி, அத்தகைய காட்சிப்படுத்தும் நடவடிக்கைகளில் எதிர்காலத்தில் ஈடுபடவேண்டாம் எனப் படைகளுக்க உத்தரவிடுமாறு தங்களை விநயமாக வேண்டுகிறோம்.

பரஸ்பரம் புரிந்துணர்வையும் நல்லெண்ணத்தையும் காட்டுவதற்காக வாய்புள்ள இடங்களில் இருந்து அத்தகைய நினைவுச் சின்னங்களை மாற்றியமைக்கவோ அல்லது அகற்றவோ உரிய வேளை வந்துவிட்டது.

இவ்வாறு இவ்விடயம் தொடர்பாகத் தாம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*