nalin bandara

பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் இராணுவத்தினருக்கு வழங்கப்படாதாம்

பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் இராணுவத்தினருக்கு வழங்கப்படாது என பிரதியமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார். பொலிஸ் அதிகாரங்களை இராணுவத்தினருக்கு வழங்கி, நாட்டில் இராணுவ ஆட்சியினை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சி தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே பிரதியமைச்சர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச பொலிஸ் அதிகாரங்கள் முப்படையினருக்கு வழங்கப்படவுள்ளதாக கூறுகிறார்.

இந்தக் கருத்தில் எதுவித உண்மையும் கிடையாது. ராஜபக்ச குடும்பத்தவர்கள் தமது ஆட்சிக்காலத்தில் பொலிஸ் அதிகாரங்களை மாத்திரமன்றி இராணுவ அதிகாரங்களையும் முறைகேடாக பயன்படுத்தினர்.

எனினும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமே பொலிசாருக்கு உரிய அதிகாரங்களை வழங்கியுள்ளது“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*