sam

சம்பந்தன் விவகாரம் – மஹிந்த அணி விடாப்பிடி!

கூட்டு எதிர்க்கட்சிக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாமை குறித்து, முன்னாள் அரச தலைவர் மகிந்த தலைமையில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி ஆராயவுள்ளனர்.

இந்தச் சந்திப்பு மகிந்தவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ வாஸஸ்தலத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கூட்டு எதிர்க்கட்சி கொழும்பில் நடத்தவுள்ள அரசுக்கு எதிரான பேரணி குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*