Paranthan

பரந்தன் பகுதியில் சாரதி ஒருவரை கடுமையாக தாக்கிய சிறப்பு அதிரடிப்படையினர்!

கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதி ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பதற்ற நிலமை ஏற்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்களின் பணியகத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தைப் பின் தொடர்ந்து சென்ற சிறப்பு அதிரடிப் படையினர் பரந்தன் சந்திப் பகுதியல் வைத்து சாரதியை பிடித்து, பரந்தன் பேருந்து நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் மக்களுக்கும் சிறப்பு அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதுடன், பதற்றமான சூழலும் ஏற்பட்டிருந்தது.

சாரதியை துப்பாக்கியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*