gotha

கோத்தாவுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக, விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களத்தை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்றில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியக நிர்மாண பணிகளின்போது, அரச பணத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பொது செத்து சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கோட்டாபய உள்ளிட்ட ஏழு பேரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*