mahinda

பழைய முறையிலேயே தேர்தல் – இணங்கினராம் மஹிந்த!

மாகாணசபை தேர்தலை பழைய தேர்தல் முறைபடி நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை ) நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இதன்போது சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் பழைய முறைபடி தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்தமையை தொடர்ந்தே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு, அதனை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்றால் தமது கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாக வாக்களிக்குமாறு கூறுவதாக உறுதியளித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஈ.பி.டி.பி. செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*