mullitivu

முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தை இடமாற்றக் கோரிக்கை

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் உள்ள கடற்­றொ­ழில் நீரி­யல் வளத் திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­கள் பக்­கச்­சார்­பாக நடக்­கின்­ற­னர். அவர்­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுக்­கப் பட்­டுள்ளது.

வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நேற்று முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்­குச் சென்­றார். அங்கு கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளைச் சந்­தித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கேட்­ட­றிந்­தார். அதன்­போதே கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளால் மேற்­கண்­ட­வாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

நான்கு உத்­தி­யோ­கத்­தர்­களே உள்­ள­னர். அவர்­கள் சுய­ந­லப் போக்­கில் செயற்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் ஒரு அதி­காரி தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டு­கின்­றார். வவு­னி­யா­வைச் சேர்ந்த ஒரு­வர் 20 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இங்கு பணி­யாற்­று­கின்­றார். இவர்­க­ளால் மீன­வர்­க­ளுக்கு எந்த உத­வி­க­ளும் இல்லை. முல்­லைத்­தீவு நீரி­யல்­வ­ளத் திணைக்­கள அதி­கா­ரி­களை இட­மாற்­றம் செய்ய வேண்­டும் என்று வடக்கு முத­ல­மைச்­ச­ரி­டம் கோரிக்கை விடுத்­த­னர்.

வடக்கு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கோரிக்­கை­க­ளைச் செவி­ம­டுத்­த­து­டன், அது தொடர்­பில் ஆரா­யப்­ப­டும் என்­றும் தெரி­வித்­தார் என்று கூறப்­பட்­டது.

சட்­ட­வி­ரோ­தக் கடற்­றொ­ழில் தொடர்­பில் என்ன நட­வ­டிக்கை எடுக்­க­லாம் என்று அறிந்து கொள்­வ­தற்­காக முல்­லைத்­தீ­வுக் கடற்­றொ­ழி­லா­ளர் சங்­க­ளைச் சந்­தித்­துப் பேசி­னேன். வெளி­மா­வட்­டத்­தில் இருந்து வரு­ப­வர்­க­ளால் பிர­தேச மீன­வர்­க­ளுக்­குப் பல பிரச்­சி­ளை­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று அறிய முடி­கின்­றது என்று வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.

சிலர் பாரம்­ப­ரி­ய­மாக இந்­தப் பிர­தே­சத்­தில் தொழில் செய்­கின்­ற­னர். அவர்­க­ளி­லும் பார்க்க அதி­க­மா­ன­வர்­கள் இப்­போது உள்­நு­ழை­கின்­ற­னர் என்­பது பிர­தேச மீன­வர்­க­ளின் குறை­யாக உள்­ளது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சட்­டத்­துக்கு முர­ணாக மீன்­பி­டித் தொழில் செய்­கின்­ற­னர் என்­றும், மீன் வளம் விரை­வா­கக் குறை­கின்­றது என்­றும் மீன­வர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

எமது மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் கொழும்பு மீன்­பிடி அமைச்­ச­ரு­டன் பேச வேண்­டிய தேவை உள்­ளது. வடக்கு மாகாண மீன்­பி­டித் திணைக்­க­ளத்­தின் அலு­வ­ல­கம் இங்கு இல்­லா­த­தும் சிர­மத்­தைத் தரு­கின்­றது என்று மீன­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். அது தொடர்­பில் நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றோம்.

மீன­வர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் மத்­திய அர­சு­டன் பேசி ஒரு முடி­வுக்கு வர­வுள்­ளோம். எதிர்­வ­ரும் 12ஆம் திகதி கொழும்பு அமைச்­சர் இங்கு வர­வுள்­ளார். எமது கருத்­துக்­களை அவ­ருக்­குத் தெரி­யப்­ப­டுத்­த­வுள்­ளேன். அவர்­க­ளு­டன் பேசிய பின்­னர்­தான் தீர்க்­க­மான முடி­வுக்கு வர முடி­யும் என்­றும் வடக்கு முத­ல­மைச்­சர் தெரி­வித்­தார்.

கருத்­துத் தெரி­வித்த வடக்கு மாகாண விவ­சாய மற்­றும் மீன்­பிடி அமைச்­சர் க.சிவ­னே­சன்,

ஏனைய அனைத்­துத் திணைக்­க­ளத்­துக்­கும் ஆளணி உள்­ளது. கடற்­றொ­ழில் திணைக்­க­ளத்­துக்கு மட்­டும் ஆளணி இல்லை. இப்­போது அதை உரு­வாக்கி வரு­கின்­றோம்.

முன்­னர் என்ன நடந்­தது என்­ப­தைப் பற்றி நான் கூற வர­வில்லை. ஆளணி உரு­வாக்­கு­தற்­காக நிய­திச் சட்­டம் இயற்­றப்­பட்டு, மொழி­பெ­யர்ப்­புக்­கா­கக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. முத­ல­மைச்­சர் என்­னி­டம் பொறுப்பை ஒப்­ப­டைத்­த­போது திணைக்­க­ளத்தை உரு­வாங்­கு­கள் என்று கூறி­யி­ருந்­தார். அதற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்னெடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆழ்­க­டல் பட­கு­களை உங்­க­ளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் வழங்க முடி­யும். ஆனா­லும் தெற்­கில் உள்­ள­வர்­களை நம்­பியே நீங்­கள் தொழி­லுக்­குச் செல்ல வேண்­டிய நிலை உள்­ளது. ஆழ் கட­லுக்­குச் செல்­வ­தற்­கான பயிற்­சி­க­ளைப் பெற வேண்­டும். உத­வித் தொகை கொடுத்­துப் பயிற்­று­விக்க முன்­வந்­துள்­ள­னர். அதைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

வட­மா­கா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், ஆ.புவ­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் முத­ல­மைச்­ச­ரு­டன் சென்­றி­ருந்­த­னர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*