mann

மன்னார் எலும்புக் கூடுகள்: வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் 43ஆவது நாளாக இன்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியின்போது, தாய் ஒருவரினதும் அவரது அருகே பச்சிளம் குழந்தை ஒன்றினதும் மனித எச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எழும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த களிமண்களை அகற்றிய சந்தர்ப்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படுகின்ற மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் முழுமையான பரிசோனைகளின் பின்னரே கருத்துத் தெரிவிக்க முடியுமென அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுவரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வகம் ஒன்றிற்கு அனுப்பிவைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திற்கு முன்வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மனித புதைகுழி அகழ்வின்பேது, இதுவரை 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*