basil

பஷில் வெளிநாடு செல்ல அனுமதி!

முன்னாள் பொருளாதார அபிவிருத்திகள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ் வெளிநாடு செல்வதற்கான அனுமதியை மாத்தறை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.

வைத்திய பரிசோதனைகளுக்காக தான் வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியது அவசியமாகவுள்ளதாக அவர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது இன்று நீதிமன்றில் ஆராயப்பட்ட போது, 3 மாதங்களுக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியை மாத்தறை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி இன்று வழங்கியுள்ளார்.

மாத்தறை- பிரிவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் ஒன்றரை ஏக்கர் காணியைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் பணச்சலவை சட்டத்தின் கீழ் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவு தாக்கல் செய்திருந்த வழக்குக்கமைய, முன்னாள் அமைச்சர் பசிலுக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*