mahesh

வடக்கு காணிகளை விடுவிக்க முடியாது – இராணுவத்தளபதி அறிவிப்பு!

வடமாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்றமாட்டோமென இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “சில ஊடகங்கள் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் தொடர்பில் தவறான கருத்துக்களை பரப்பிவருகின்றன.ஆகவே மக்கள் இராணுவம் மீதான நம்பிக்கையினைக் கைவிடவேண்டாம், இதுவரை காலமும் இராணுவத்தின் சேவைகள் மற்றும் செயற்பாடுகள் நாடுமுழுவதும் எவ்வளவு நேர்த்தியாக இடம்பெற்றதோ அவ்வாறே தொடர்ந்தும் காணப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு தீர்மானத்தினையும் இராணுவம் மேற்கொள்ளாது எனவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*