Dinesh-Gunawardena_5

சம்பந்தனின் பதவிக்கு ஆப்பு?!

எதிர்க்­கட்சி தலைவர் பதவி தமது அணிக்கு வழங்­கப்­ப­ட­ வேண்டும் என்ற கோரிக்­கையை விடுக்கும் நோக்கில் தினேஷ் குண­வர்த்­தன தலை­மை­யி­லான குழு­வினர் இவ்­வாரம் சபா­நா­யகருடன் பேச்சு நடத்­த­வுள்­ளனர்.

இதன்­போது தமது அணிக்கு 70 உறுப்­பி­னர்கள் இருப்­ப­தா­கவும் எனவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சபா­நா­ய­க­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இது தொடர்பில் கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற குழுத் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி எமக்கு வழங்­கப்­ப­ட­வேண்டும். கூட்டு எதி­ரணி தனி அணி­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.

தற்­போது கூட்டு எதி­ர­ணியில் 70 உறுப்­பி­னர்கள் உள்­ளனர். ஆனால் 16 பேரைக் கொண்­டுள்ள தமிழ்க் கூட்­ட­மைப்­புக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அதனை ஏற்க முடி­யாது. 70 உறுப்­பி­னர்­களைக் கொண்­டுள்ள கூட்டு எதி­ர­ணிக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இந்­நி­லையில் இது தொடர்பில் நாங்கள் பல தட­வைகள் சபா­நா­ய­கரை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்ளோம். ஆனால் இது­வரை எமக்கு எதிர்க்­கட்சி அந்­தஸ்து கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் தற்­போது கூட்டு எதி­ர­ணியில் உள்ள எம்.பி. க்களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. எனவே இவ்வாரம் சபாநாயகரை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எமக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுக்கவுள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*