jewelry-snatch

கிளிநொச்சியில் திருடர்களைப் பிடித்த மக்களுக்கு நேர்ந்த பரிதாபம்!

கிளிநொச்சி முறிகண்டி – அக்கராயன் வீதியில் நேற்று மாலை பெண் ஒருவருடைய தாலி கொடியை அறுக்க முயன்றவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அக்கராயன் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இந்த வீதியால் பயணித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குடும்பஸ்த்தருடைய மனைவியின் தாலி கொடியை அறுக்க முயன்றுள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டமை காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்களும், குறித்த குடும்பஸ்த்தரும் இணைந்து திருடர்களை துரத்தியதில் ஒருவர் பிடிக்கப்பட்டு நையபுடைக்கப்பட்டதன் பின் அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

பின்னர் மற்றய திருடனும் மடக்கி பிடிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டான்.

முறிகண்டி அக்கராயன் வீதியில் தொடர்ச்சியாக பெண்களின் நகைகள் அறுத்து செல்லப்படும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

இந்த மாதமும் இரு பெண்களிடம் நகைகள் அறுத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கொடுத்தபோதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் திரண்டு பொலிஸாருடன் தர்க்கப்பட்ட நிலையில் திருடர்களை மடக்கி பிடித்த மக்கள் மீது வழக்கு பதிவு செய்யபோவதாக பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே மக்கள் பொலிஸாருடைய பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு பொறுப்புவாய்ந்தவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*