vimal3

கரும்புலிகள் நாள் கடைப்பிடிப்பு தொடர்பில் வீரவன்சவுக்கு கவலை!

கரும்­பு­லி­கள் தினத்தை ஆசி­ரி­யர்­க­ளும், மாண­வர்­க­ளும் விளக்­கேற்­றிக் கடைப்­பி­டிக்­கும் அள­வுக்கு வடக்­கில் நிலைமை மோச­ம­டைந்­துள்­ளது. சட்ட ஆட்­சிக்­குப் பதி­லாக அங்கு அரா­ஜ­கமே இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது என்று தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல்­வீ­ர­வன்ச தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று ஒழுங்­குப் பிரச்­சி­னையை எழுப்­பியே வீர­வன்ஸ இந்­தக் கருத்தை வெளி­யிட்­டார்.

‘‘தற்­கொ­லைத் தாக்­கு­தல்­களை நடத்­திய கரும்­பு­லி­கள் தினம் வடக்­கில் பகி­ரங்­க­மா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது. படங்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஆசி­ரி­யர்­க­ளும், மாண­வர்­க­ளும் வெளியே வந்து விளக்­கேற்றி அஞ்­சலி செலுத்­து­கின்­ற­னர்.

மறு­பு­றத்­தில் ஆவா குழு­வும் தலை­தூக்­கி­யுள்­ளது. பொலி­ஸா­ருக்கு விடு­முறை இல்­லா­மல் செய்­யப்­பட்­டி­ருந்­தா­லும் அவர்­க­ளால் அங்கு சட்­டம், ஒழுங்கை நிலை­நாட்ட முடி­யா­துள்­ளது. அது­மட்­டு­மல்ல, வடக்­கில் 25 வீதம் படைக்­கு­றைப்பு இடம்­பெற்­றுள்­ளது. இரா­ணுவ முகாம்­க­ளும் அகற்­றப்­பட்­டுள்­ளன. இவ்­வ­றா­ன­தொரு நிலை­மை­யில்­தான் புலி­கள் மீண்­டும் வர­வேண்­டு­மென விஜ­கலா கூறி­யுள்­ளார்’’ என்று விமல் வீர­வன்ச மேலும் தெரி­வித்­தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*