ranjith

விஜயகலா மீதான விசாரணைகள் தொடரும் என்கிறது அரசாங்கம்!

சிறு­வர் மற்­றும் மக­ளிர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவ­ரது அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டாலோ அல்­லது அவ­ரா­கவே வில­கி­னாலோ கூட அவ­ருக்கு எதி­ரான பொலிஸ் விசா­ர­ணை­கள் நிறுத்­தப்­ப­டாது.

இவ்­வாறு சட்­டம் ஒழுங்கு மற்­றும் அரச நிர்­வாக, முகா­மைத்­துவ அமைச்­சர் ரஞ்­சித் மத்­தும பண்­டார தெரி­வித்­தார்.

கொழும்­பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­தா­வது-,
தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை மீண்­டும் உரு­வாக்க வேண்­டும் என்­பதே தமது முக்­கிய நோக்­கம் என்று இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். இந்­தக் கருத்தை முற்­றாக எதிர்க்­கின்­றேன்.

வடக்­கிலோ தெற்­கிலோ எந்­தப் பயங்­க­ர­வா­தத்­துக்­கும் இட­ம­ளிக்க போவ­தில்லை. அவ­ரின் சர்ச்­சைக்­கு­ரிய கூற்­றுத் தொடர்­பில் ரணில் சட்­டமா அதி­ப­ரின் ஆலோ­ச­னை­யைக் கோரி­யுள்­ளார். அதன்­படி அவர் நட­வ­டிக்­கை­களை எடுப்­பார்.

பொலி­ஸா­ருக்கு கிடைக்­கப் பெற்­றுள்ள முறை­பா­டு­கள் தொடர்­பில் தனி­யான விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. விஜ­ய­கலா பதவி வில­கி­னா­லும் வில­கா­விட்­டா­லும் அவ்­வி­சா­ர­ணை­கள் தொட­ரும். விரை­வில் அவ­ரி­டம் வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­ப­டும் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*