austin

மைத்திரியுடனான முரண்பாடே ஒஸ்ரின் பெர்னாண்டோ பதவி விலகக் காரணமாம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி செயலாளரின் இராஜினாமா குறித்த அறிவிப்பை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிபடுத்தியுள்ளது.

இவரது இராஜினாமாவிற்கான காரணம் வெளியாகாத அதேவேளை, ஜனாதிபதியுடனான முரண்பாடுகள் காரணமாக அவர் பதவி விலகியுள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதற்கு முன்னர், கிழக்கு மாகாண ஆளுனராக பணியாற்றிவந்த ஒஸ்ரின் பெர்னாண்டோ, பின்னர் ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் ஜனாதிபதி ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*