CAPTION:New York Times deputy foreign editor Michael Slackman.  (Photographs by TODD HEISLER/THE NEW YORK TIMES)

Assignment ID: 30127460A
CAPTION:New York Times deputy foreign editor Michael Slackman. (Photographs by TODD HEISLER/THE NEW YORK TIMES) Assignment ID: 30127460A

மஹிந்த தரப்பின் மிரட்டலுக்கு பதிலளித்த அமெரிக்க ஊடக ஆசிரியர்!

முன்­னார் அரச தலை­வர் மகிந்த ராஜ­பச தொடர்­பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்­பில் ஏதே­னும் தெளி­வு­ப­டுத்­தல்­கள் தேவைப்­ப­டின் எமது பத்­தி­ரி­கை­யின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு ­கொள்ள முடி­யும். அதை­வி­டுத்து இலங்­கை­யின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்­தல் விடுக்க வேண்­டாம். இவ்­வாறு ‘நியுயோர்க் டைம்ஸ்” சர்­வ­தேச நாளி­த­ழின் ஆசி­ரி­யர் மைக்­கல் ஸ்லெக்­மன் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மை­யில் அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரம் தொடர்­பில் நியு­யோர்க் டைம்ஸ் நாளி­தழ் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அது தொடர்­பில் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்த கருத்­துக்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யில் நியு­யோர்க் டைம்ஸ் நாளி­த­ழின் ஆசி­ரி­யர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதில் உள்­ள­தா­வது.

இலங்­கை­யின் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மற்­றும் சில நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பொன்­றின் போது எமது பத்­தி­ரி­கை­யால் ஜூன் மாதம் 26 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரம் தொடர்­பான செய்­திக்­கான தக­வல் பங்­க­ளிப்பை மேற்­கொண்ட இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்­கள் இரு­வ­ருக்கு பகி­ரங்க அச்­சு­றுத்­தல் விடுத்­துள்­ள­னர்.

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான இவ்­வா­றான அச்­சு­றுத்­தல் நட­வ­டிக்­கை­கள் ஏற்­கப்­பட முடி­யா­தவை. இத்­த­கைய செயற்­பா­டு­கள் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு தடை­யாக அமை­வ­து­டன், ஊட­கங்­களை அமை­திப்­ப­டுத்­தும் வித­மா­க­வும் அமைந்­துள்­ளன. செய்­தியை அறிந்­து­கொள்­வ­தில் இலங்கை மக்­கள் கொண்­டுள்ள உரி­மை­யினை மறு­த­லிப்­ப­தா­க­வும் உள்­ளது.

இலங்­கை­யின் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் எமது நிறு­வ­னத்­துக்கோ அல்­லது வேறு நிறு­வ­னத்­துக்கோ எவ்­வித அச்­சு­றுத்­தல்­க­ளும் இன்றி சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தனை உரிய அதி­கா­ர­ச­பை­கள் உறு­திப்­ப­டுத்த வேண்­டும் என எதிர்­பார்க்­கின்­றோம்.

எமது பத்­தி­ரி­கை­யில் வெளி­யான செய்தி தொடர்­பில் ஏதே­னும் முரண்­பா­டு­கள் இருப்­பின் நியு­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் உயர்­மட்ட ஆசி­ரி­யர்­க­ளைத் தொடர்­பு­ கொள்ள முடி­யும். அதனை விடுத்து இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்­களை அச்­சு­றுத்­தும் செயற்­பா­டு­கள் ஏற்­கப்­பட முடி­யா­தவை.- என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*