mavai-965s

மாவை தான் வேட்பாளர் என்கிறார் சிறீதரன்!

வடக்கு மாகாண சபைக்­கான தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் நிறுத்­தப்­ப­டு­கின்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத்­தான் இருப்­பார். அதில் எந்த மாற்­ற­மும் இல்லை. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளைச் சந்­தித்­த­போது அவர் இத­னைக் கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் யார் என்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழு இன்­னும் முடிவு எடுக்­க­வில்லை. கட்­சி­யி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்­கள், கட்­சி­யின் தலை­வர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வைக் கள­மி­றக்­க­வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர்.

கடந்த தேர்­த­லி­லும் அவ­ருக்­குத்­தான் அந்­தச் சந்­தர்ப்­பம் இருந்­தது.மாற்­றத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்­காக கடந்த தடவை நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ­ர­னைக் கள­மி­றக்­கி­யி­ருந்­தோம்.

அப்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­க­ளி­னால் அவ­ரைத் தெரிவு செய்­தி­ருந்­தோம். கடந்த தேர்­த­லில் தன்­னு­டன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை சோ.சேனா­தி­ரா­சா­வும் போட்­டி­யி­டட்­டும்.

இரண்டு ஆண்­டு­க­ளின் பின்­னர் அவர் ஆட்­சிப் பொறுப்­பேற்­கட்­டும் என்று விக்­னேஸ்­வ­ரன் அப்­போது கூறி­யி­ருந்­தார். ஆனால் மாவை அதனை நிரா­க­ரித்­தி­ருந்­தார்.

மாவை சேனா­தி­ராசா, தமிழ் மக்­க­ளு­டைய விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றில் 50ஆண்­டு­கள் அர­சி­யல் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார். மக்­க­ளோடு இருந்­தி­ருக்­கின்­றார். அவ­ரு­டைய பய­ணத்­துக்கு ஒரு சந்­தர்ப்­பம் வழங்­க­வேண்­டும்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் இரண்டு பங்­கா­ளிக் கட்­சி­கள் இருக்­கின்­றன. இந்­தக் கட்­சி­க­ளி­னது விருப்­பங்­க­ளும் ஆரா­யப்­ப­டும். எல்­லோ­ரு­டைய விருப்­பங்­க­ளின் அடிப்­ப­டை­யில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வேட்­பா­ளர்­தான் நிறுத்­தப்­ப­டு­வார் என்­ப­தில் எந்­த­வித மாற்­ற­மும் இல்லை. முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டு­கின்­ற­வர் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வ­ரா­கத்­தான் இருப்­பார் – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*