mahinda

மஹிந்தவை பிரதமராக்க திட்டம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிக்கு நியமிப்பதே கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நோக்கம் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூட்டு அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவே பெரும்பாண்மையான ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.

நாட்டில் ஒரு அமைதியான சூழல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக வேண்டும் எனவும், அதன் பிரகாரம் நாட்டு மக்களின் கருத்தை முன்னிலைப்படுத்தி ஒருமித்த திட்டத்தை எமது குழு தயாரிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை நாட்டின் எதிர்காலம் தொடர்பில் அரசியல் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்படுத்துவதுடன், தற்போதைய அரசு மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ப்பதே நோக்கம் எனவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*