Ravi-Karunanayake_4_6

மீண்டும் ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி?!

கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் பதவி விலகிய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு, மீண்டும் அமைச்சுப் பதவியொன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, எதிர்வரும் வாரமளவில் அவர் அமைச்சராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் புதிதாக இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டிருந்த நிலையில், அதன்போதே ரவிக்கும் அமைச்சு பொறுப்பு வழங்கப்படவிருந்த போதிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டில் இல்லாத நிலையில் அது பிற்போடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையதாக எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து ரவி கருணாநாயக்க தனது பதிவியிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*