inparasa

புதிய கட்சி தேவையில்லை என்கிறது புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் கட்சி!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்றை தொடங்குவதை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்றுவதே நல்லது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில், புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பின்போது அதன் தலைவர் கந்தசாமி இன்பராசா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு குறிப்பிடுகையில்,“வடக்கு மாகாண முதல்வரை தலைமையில் புதிய கட்சி ஆரம்பிப்பது தேவையற்றதாகவே கருதுகிறேன். இங்கே புதிய கட்சி ஒன்று வேண்டாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை தவறாக வழிநடத்தும் சம்பந்தனின் தலைமையை மாற்றி புதிய தலைமை மக்கள் முன் ஏற்றால் போதும்” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*