usmetcomdn_07

அமெரிக்க, சீன இராணுவ உயர் அதிகாரிகள் இலங்கையில்!

அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த நான்கு படை அதிகாரிகளைக் கொண்ட குழு, இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. தெற்காசியப் பிராந்திய சிவில் விவகார கருத்தரங்கிற்கு முன்னதாக குறித்த விஜயம் அமைந்துள்ளதுடன், இலங்கையில் முன்னெடுக்கப்படும் சிவில் – இராணுவ ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவே அமெரிக்க படை அதிகாரிகள் குழு பயணம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க படை அதிகாரிகளின் இந்தக் குழு, நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது, 2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட சிவில்- இராணுவ ஒத்துழைப்பு திட்டங்கள் தொடர்பாக இராணுவத் தளபதி விளக்கிக் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி சீன இராணுவ குழுவொன்றும் இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. சீன நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாண பணிகளின் தொழில்நுட்ப உதவியை வழங்கவே இந்த நால்வரை கொண்ட குழு இலங்கை பயணமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படும் நிர்மாண பணிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தூதுக்குழுவினருடனான பேச்சுவார்த்தைகளில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

chine-dele-comd_05

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*