Kaala

காலாவைப் புறக்கணித்து ரஜினிகுப் பாடம் புகட்டுவோம்!

மராட்டிய தேசத்தை பூர்விகமாகக் கொண்டு கர்நாடகாவில் பிறந்து பேருந்து நடத்துனராக இருந்த சிவாஜிராவ்வை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தாக ஆக்கி அழகுபார்த்தது தமிழினம். ஆனால் இன்று ரஜினியோ தங்களுடைய வாழ்வியல் உரிமைக்காகப் போராடும் அதே தமிழ் மக்களைச் சமூகவிரோதிகள் என்கிறார்.

”என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா!  என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும்
கொடுப்பது முறையல்லவா?” என்ற வரிகளினால் தமிழர்களின் நெஞ்சாங் கூட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த ரஜினிகாந்தின் நிஜ முகம் கண்டு தமிழர்கள் குமுறுகிறார்கள்.

அன்று ஈழபூமி இராமனால் சபிக்கப்பட்டது என்று சிங்களவர்களால் நடாத்தப்பட்ட ஈழப்படுகொலையை நியாயப்படுத்திய ரஜினிகாந் இன்று இந்திய தமிழக அரசாங்கங்களினால் கூட்டுப்படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்கிறார். ஈழப்படுகொலையை ஆன்மிகத்துக்குள் புதைத்த ரஜினிகாந் தமிழகப் படுகொலையை பயங்கரவாதத்துக்குள் புதைத்துள்ளார்.

ஒரு கையில் துப்பாக்கியுடனும் மறுகையில் மனித உரிமைச் சாதனப் புத்தகத்துடனும் எமது இராணுவத்தினர் போர்புரிந்தார்கள் என்று தமிழீழ இனப்படுகொலையை நியாயப்படுத்திய சிங்கள அமைச்சரின் கூற்றுக்கு நிகராக படுகொலை செய்த காவலர்களை புனிதர்களாகவும் படுகொலைசெய்யப்பட்ட (உரிமைக்காகப் போராடிய) தமிழர்களை சமூகவிரோதிகளாகவும் சித்தரிக்கிறார் ரஜினிகாந்.

எதற்கெடுத்தாலும் போரட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாக மாறிவிடும் என்று செய்தியாளரை மிரட்டிய ரஜினிகாந் தமிழகத்தின் ஆட்சிப்பீடம் ஏறுவாரானால் ராஜபக்ச ஈழத்தில் நடாத்தியதை ரஜினிகாந் மத்திய அரசின் துணையுடன் தமிழகத்தில் அரங்கேற்றுவார்.

இந்த ஆபத்தை உணர்ந்து உலகத் தமிழினம் விழிப்படைய வேண்டிய நேரம் இது. தமிழின விரோத ரஜினிகாந்திற்கு பாடம் புகட்டும் முகமாக உலகம் எங்கும் பரவிவாழும் தமிழர்கள் அனைவரும் ரஜினிகாந்தின் காலா படம் உட்பட அனைத்துப் படங்களையும் திரையில் காணாது புறக்கணிப்போம்.

தூத்துக்குடியில் அமைதி வழியில் தம் உரிமைக்காகப் போராடிய எம் தமிழ் உறவுகளைப் படுகொலைசெய்த மத்திய மாநில அரசாங்கங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ரஜினிகாந்தின் உயர்ச்சிக்கு காரணமாக இருந்த நாமே அவரின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருப்போம் என்று உறுதியெடுப்போம்.

”மொழியால் இணைவோம் உணர்வாய் எழுவோம்!”

– உலகத் தமிழர் விடுதலை இயக்கம் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*