sam

சுதந்திரக்கட்சியின் 16பேர் அணி சம்பந்தனை சந்தித்தது!

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துள்ளனர்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பிற்கான நோக்கம் வெளிப்படாத போதிலும், மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20ஆவது அரசியலமைப்புச் திருத்தச்சட்டம் குறித்து ஆராயும் வகையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றிருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த சந்திப்பில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீ.சு.கட்சியிலிருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரிவித்த குறித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசாங்கத்தில் தாம் வகித்த அமைச்சு பொறுப்புகளிலிருந்து விலகியதுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியில் இணையப் போவதாக பிரசாரம் செய்துவருகின்றனர்.

எவ்வாறாயினும், சுதந்திரக் கட்சியில் வகித்துவரும் பதவிகளிலிருந்து அவர்கள் ஒருபோதும் நீக்கப்படமாட்டார்கள் என ஸ்ரீ.சு.க. மத்திய செயற்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*