Thilanga

பதவி விலகினார் சுமதிபால!

தேர்தலில் தோல்வியடைந்த தன்னை, தேசிய பட்டியலினூடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி பாராட்டி, நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து திலங்க சுமத்திபால விலகியுள்ளார்.

தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக, கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரத்தின் கீழ் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்க விருப்பமில்லை என்றும் அவர் தனது இராஜினாமா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*