ranil

சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ்?!

சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என முன்னாள் சமுர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) சுகதாச உள்ளக விளையாட்டரங்கிள் இடம்பெற்ற மே தின நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதற்கு எதிராக கருத்து தெரிவிக்கும் போதே சமுர்த்தி தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*