sritharan

கசிப்பு, கஞ்சாவை கட்டுப்படுத்த சிறீதரன் விபரீத யோசனை!

கிளிநொச்சியில் சாரயக் கடைகள் ஒன்றும் இல்லை. எனவே கசிப்பு மற்றும் கஞ்சா பாவணையை தடுக்க சில சாரயக் கடைகளை புதிதாக அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – கரைச்சி பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இடம்பெற்றபோது, பெரிய பரந்தன் பகுதியில் அமையவுள்ள மதுபானசாலை தொடர்பில் உரையாற்றும்போதே  இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் சகிப்பு கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத போதை பொருள் பாவனைகள் அதிகரித்து காணப்படுவதனால் அதனை குறைப்பதற்கு புதிதாக சில சாராயக் கடைகளை அமைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 64 சாராயக் கடைகள் காணப்படுகின்றபோதும் இங்கு ஒன்றும் இல்லை.

பெரிய பரந்தன் பிரதேசத்தில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்கள் இருப்பதோடு, பெரும்பாலனவர்கள் பனை தென்னைவள தொழில் செய்கின்றவர்களாகவும் உள்ளனர். எனவே புதிதாக மதுபானசாலை அமைப்பது இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் பாதிக்கும் என மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர்” எனத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து, கூட்டத்தில் கலந்துகொண்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*