ananthan

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – சபையில் ஆனந்தன்!

ஆட்சி மாற்றத்துக்குப் பெரும்பங்கு வகித்தவர்கள் தமிழர்களும் முஸ்லிம்களும். மூன்று வருடங்கள் கடந்தும் பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது, இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றாக இருந்தால் தான் தீர்வு காண முடியும் என நினைத்து ஆதரவு வழங்கினோம். ஆனால், நீங்கள் எதிரும் புதிருமாக இருந்து, வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்கின்றமையானது அனைத்து மக்களுக்கும் இழைக்கும் அநீதி.

பெரிய ஒரு அழிவை சந்திக்கும் நிலைக்கு நீங்கள் சென்றுள்ளீர்கள். நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளுக்கும் போர்க்குற்றங்களுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆட்சி மாற்றத்துக்கு ஆதரவு அழித்தோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்துக்கு 405 நாள்கள் கடந்தும் இதுவரை தீர்வு கிட்டவில்லை. தென் பகுதியில் இருப்பவர்களைக் கொண்டு வந்து அதிகாரிகளாகவும், அரச ஊழியர்களாகவும் வடக்கில் நியமிக்கின்றீர்கள்.

3 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் காணிகளை மகாவலி அபிவிருத்திக்காக கையகப்படுத்தியுள்ளீர்கள். அந்தக் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – .- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*