rape

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது வடக்கில் பாலியல் வன்கொடுமைகள்; சந்திரிகாவிடம் முறைப்பாடு!!

போரி­னால் துவண்டு போயுள்ள வடக்­குப் பெண்­கள் மீது அரச அதி­கா­ரி­கள், இரா­ணு­வத்­தி­னர் மற்­றும் பொலி­ஸா­ரி­னால் பாலி­யல் வன்­மு­றை­கள் தொடர்ந்­தும் கட்­ட விழ்த்து விடப்­பட்டு வரு­கின்­றன. ஏற்­க­னவே பாதிப்­புக்கு உள்­ளான பெண்­கள் மேலும் பாதிப்­புக்கு உள்ளா­கின்­ற­னர். என்று உள­வி­யல் செயற்­பாட்­டா­ளர்­க­ளால், முன்­னாள் அரச தலை­வ­ரும், தேசிய ஒரு­மைப்­பாட்­டிற்­கும் நல்­லி­ணக்­கத்­துக்­கு­மான பணி­ய­கத்­தின் தவி­சா­ள­ரு­மான சந்­தி­ரி­கா­வி­டம் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

வடக்கு மாகா­ணத்­துக்கு வருகை தந்­துள்ள சந்­தி­ரிகா அம்­மை­யா­ருக்­கும், உள­வி­யல் செயற்­பாட்­டா­ளர்­கள் மற்­றும் பொது அமைப்­பி­ன­ருக்­கும் இடை­யி­லான கலந்­து­ரை­யா­டல், யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பி­லேயே மேற்­படி விட­யங்­கள் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சந்­திப்­பில் மேலும் கூறப்­பட்­ட­தா­வது, வடக்­கில் போரால் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளில் பலர் இன்­றும் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு முகம் கொடுத்து வரு­கின்­ற­னர். வடக்கு மாகா­ணத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெண்­கள் மீதான வன்­மு­றை­கள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது.

முல்­லைத்­தீ­வில் நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னர், பொலி­ஸார் மற்­றும் அரச, தனி­யார் அதி­கா­ரி­கள் பெண்­கள் மீது பாலி­யல் வன்­கொ­டு­மை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
தனித்து வாழ்­கின்ற பெண்­கள், பொரு­ளா­தார ரீதி­யாக பின்­ன­டை­வில் உள்­ள­னர். அவர்­களை குறி­வைத்து பாலி­யல் ரீதி­யான வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன.

ஆரம்­பத்­தில் இவர்­க­ளின் அலை­பேசி இலக்­கங்­களை அறிந்து கொள்­ளும் இவர்­கள் நாள­டை­வில் அலை­பேசி ஊடாக நட்­பினை ஏற்­ப­டுத்­து­கின்­ற­னர். இரா­ணு­வம் மற்­றும் பொலி­ஸார் தமிழ் பெண்­கள் மீது பாலி­யல் ரீதி­யான வன்­மு­றை­களை மேற்­கொள்­கின்­ற­னர்.

பாது­காப்பு தரப்­பி­ன­ரின் அனு­ச­ர­ணை­யு­டன் அங்­குள்ள ஒரு சில­ரும் பெண்­கள் மீது வன்­மு­றை­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் ஆதிக்­கம் இருப்­ப­தால் பாதிக்­கப்­பட பெண்­க­ளுக்கு நியா­யம் கிடைக்க வாய்ப்­பில்லை.

உரிய நட­வ­டிக்­கை­யும் எடுக்க முடி­யாத நிலை காணப்­ப­டு­கின்­றது. இந்த நிலமை நாம் பொது­மக்­களை சந்­திக்­கும் போது அறிந்து கொண்ட விட­யங்­க­ளா­கும். மேலும் போரின் பின்­னர் வவு­னியா முகாம்­க­ளில் இருந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளில் அதிக குடும்ப வன்­முறை சம்­ப­வங்­கள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன.

எமது பிர­தே­சங்­க­ளில் உள்ள காணா­மல் ஆக்­கப்­ப­ட­வர்­க­ளின் உற­வு­களை நாம் சந்­தித்த போது தமது பிள்­ளை­கள் ஏதோ ஒரு இடத்­தில் உயி­ரு­டன் இரு­கின்­றார்­கள் என்ற நம்­பிக்­கை­யி­லேயே ஒளிப்­ப­டங்­க­ளு­டன் காத்­தி­ருக்­கின்­றோம் என கூறு­கின்­ற­னர். அவர்­கள் மிகுந்த மன உளைச்­ச­லில் இருக்­கின்­ற­னர் என்று குறிப்­பிட்­ட­னர்.

இதன் போது குறுக்­கிட்ட முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா காணா­மற் போன­வர்­கள் தொடர்­பில் காண­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான பணி­ய­கம் உரு­வாக்­கப்­பட்டு விட்­டது தானே அவர்­கள் அதனை பார்த்­துக் கொள்­வார்­கள். நாம் அவர்­களை பொரு­ளா­தார ரீதி­யாக பலப்­ப­டுத்த வேண்­டும் என்று குறிப்­பிட்­டார். மேலும், பெண்­கள் மீதான பாலி­யன் வன்­கொ­டுமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு சந்­தி­ரிகா அம்­மை­யார் பதில் வழங்­க­வில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*