army

இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் பலி! சாவகச்சேரியில்

சாவகச்சேரி ஏ-9 வீதி புளியடிச் சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் உயிரிழந்தவர் அல்லாலை வடக்குக் கொடிகாமத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான வீதியில் புகையிரத வீதிக்கு சமாந்தரமாக வாகனங்கள் தரிக்க முடியாத இடத்தில் வேகக் கண்காணிப்பு கருவியுடன் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் கார் ஒன்றை மறித்துள்ளனர்.

இதன்போது கார் சடுதியாக நிறுத்தப்பட அதன் பின் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காரினை முந்திச் செல்ல முற்பட்டுள்ளார். இதன்போது பின்னால் வந்த இராணுவ பஸ் மோதியதில் குறித்த இளைஞன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து குறிந்த இளைஞனின் சடலம், சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டது இதன்போது, குறித்த விபத்து ஏற்பட காரணமான பொலிஸார் வெளியேறிய போது அங்கு திரண்டிருந்த இளைஞர்களால் அவர்கள் மறிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*