mano

கூட்டமைப்புக்கு மனோ அறிவுரை!

கிழக்கு மாகாண தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால், அதனை செயற்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உள்ளே இருந்துகொண்டு அழுத்தம் கொடுக்க தாம் தயாரென அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அதிகளவான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் மனோ கணேசன் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைகளின் போது, அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதென சுட்டிக்காட்டிய மனோ, பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக அரசாங்கத்திடம் முறையிடுவதற்கான சந்தர்ப்பம் கூட்டமைப்பிற்கு அதிகமாக உள்ளதென குறிப்பிட்டார். கூட்டமைப்பு அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, கோடீஸ்வரனின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் மனோ கணேசன் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*