thilak (1)

அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றதாம் என்கிறார் திலக்மாரப்பன!

இலங்­கையில் நல்­லி­ணக்­கத்­தையும் பொறுப்­புக்­கூற­லையும் ஏற்­ப­டுத்த அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் இருக்­கின்­றது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன நேற்று ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தெரி­வித்தார். ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நேற்று நடை­பெற்ற இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்­தான விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்­குள்­ளான பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் அறிக்கை மீதான விவா­தமே இவ்­வாறு நடை­பெற்­றது.

திலக் மாரப்­பன தனது உரையில் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

நான் அமைச்­சர்­க­ளா­ன­சரத் அமு­னு­கம மற்றும் பைஸர் முஸ்­தபா ஆகி­யோ­ருடன் வந்தி?ருக்­கின்றேன். இலங்­கையில் சட்டம் ஒழுங்கு சரி­யாக செயற்­ப­டு­கி­றது. மனித உரிமை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்­து­ருக்­கிறோம். காணாமல் போனோர் குறித் து ஆராய அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. 70 வீத­மாக காணிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

நட்ட ஈடுகள் வழங்கும் அலு­வ­லகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. பயங்­க­ர­வாதம் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்டு புதிய சட்­ட­மூலம் கொண்டு வரப்­படும். அண்­மைய காலங்­களில் ஏற்­பட்ட வன்­மு­றைகள் தொடர்பில் கவலை அடை­கிறோம். இதன் பின்னர் இவ்­வாறு வன்­மு­றைகள் ஏற்­பட இடமளிக்கப்பட மாட்டோம். இலங்கையில் அனைவரும் சமஉரிமையுடன் வாழ உரிமையுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*