neelakandan

கூட்டமைப்பு உருவாக்கத்தில் பங்கெடுத்த மூத்த சட்டத்தரணி கந்தையா நீலகண்டன் மறைவு!

மூத்த சட்டத்தரணியும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் பிரதான வழிகாட்டியாக செயற்பட்டவருமான கந்தையா நீலகண்டன், இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கொழும்பில் காலமாகிவிட்டார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாயைச் சேர்ந்த கந்தையா நீலகண்டன், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவராகவும் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருப்பணிச் சபையின் தலைவராகவும் சைவ விருத்திய சங்கத்தின் செயலாளராகவும் இறக்கும் வரை செயற்பட்டவர்.

வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராகவும் அங்கம் வகித்த அவர், பல தடவைகள் தலைவராகவும் பதவி வகித்திருந்தார்.

தமிழர் அரசியலில் கூடுதல் ஈடுபாடுகொண்ட கந்தையா நீலகண்டன், 2001ஆம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான கூட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டவர்.

அனைத்து தமிழ்க் கட்சிகளையும் ஒன்றினைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியிலும் அதற்கான வழிகாட்டல்களிலும் ஈடுபட்டிருந்தார்.

72 வயதான கந்தை நீலகண்டன் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இரண்டு மகன்மாரும் ஒரு மகளும் சட்டத்தரணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*