viky

வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் கை விரித்தார் இந்தியத்தூதர்!

வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைப்பதற்கான அழுத்தங்களை இந்தியாவால் வழங்கமுடியாத சூழல் காணப்படுவதாக இந்தியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பில் இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கைவிடுத்திருந்தார்.

அண்மையில் இந்தியத்தூதுவர் தரன்ஜித் சந்துவை வடக்கு முதல்வர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

அந்தச் சந்திப்பின்போதே வடக்கு – கிழக்கு இணைப்பு விவகாரம் தொடர்பில் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த இந்தியத்தூதுவர்,

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைப்பு என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்றும் அத்துடன் அது நீதிமன்ற தீர்ப்புடன் தொடர்புபட்ட விடயம் என்றும் தெரிவித்த அவர்,

உள்நாட்டு விவகாரங்களில் தாம் தலையிடப்போவதில்லை என்றும் தெரிவித்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*