denish

டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சி!

முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக வடக்கில் மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் தலைமையில் புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளிகள் , மாவீரர்களின் குடும்ப உறவினர்களை உள்ளடக்கியதாக அந்த கட்சி அமைக்கப்பட்ட பின்னர் உறுப்பினர்களின் கருத்துகளின் பிரகாரம், எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்படவுள்ளது.

அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இக் கட்சி உருவாக்கம் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*