kondavil

மீண்டும் குடாநாட்டில் வாள்வெட்டுக் கொரூரம் தலைவிரித்தது!!

யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த சில நாள்­க­ளாக மீண்­டும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இரண்டு பொலி­ஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டை அடுத்து பொலி­ஸார் வாள் வெட்­டுக் குழுக்­க­ளுக்கு எதி­ரா­கக் கடும் நட­வ­டிக்கை எடுத்­த­னர். இதனை அடுத்து அடங்­கி­யி­ருந்த வாள்­வெட்­டுக் குழுக்­கள் மீண்­டும் தலை­தூக்­கி­யுள்­ளன. கடந்த 4 நாள்­க­ளில் மட்­டும் 7 இடங்­க­ளில் நடந்த 8 வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் 12 பேர் படு­கா­ய­ம­டைந்தனர்.

நேற்­றி­ரவு மட்­டும் மூன்று இடங்­க­ளில் வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அட்­ட­கா­சம் புரிந்­த­னர். வெவ்­வேறு சம்­ப­வங்­க­ளில் இடம்­பெற்ற இந்த வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் அறு­வர் காய­ம­டைந்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

கோண்­டா­வி­லில் கடை ஒன்­றும் அடித்து நொருக்­கப்­பட்­டது. கடை உரி­மை­யா­ளர் கடந்த சனிக்கிழமை இரவு குரு­ந­க­ரில் வைத்து வாளால் வெட்­டப்­பட்­டி­ருந்­தார்.
கோண்­டா­வில், மானிப்­பாய், ஆறு­கால்­ம­டம் பகு­தி­க­ளில் நேற்­றைய வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றன.

கோண்­டா­வில் டிப்­போச் சந்­திக்கு அண்­மை­யில் உள்ள உண­வ­கம் ஒன்­றுக்கு நேற்று இரவு 8.30 மணி­ய­ள­வில் வந்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அந்­தக் கடையை அடித்து உடைத்­துச் சேத­மாக்­கி­னர்.

உணவு உண்­ப­தற்கு கடைக்­குச் சென்­ற­வர்­கள் அவர்­க­ளால் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­னர். கைக் கோடரி, மற்­றும் வாள்­க­ளு­டன் கடை­யி­னுள் சென்ற கும்­பல் அங்கு பணி­யில் இருந்த ஒரு­வரை வாளால் வெட்­டி­விட்­டுத் தப்­பிச் சென்­றது.

இதில் புத்­தூ­ரைச் சேர்ந்த செல்­லத்­துரை மணி­வண்­ணன் (36 வயது) என்­ப­வர் படு­கா­ய­ம­டைந்­தார். இதன் பின்­னர் அங்கு பதற்ற நிலை ஏற்­பட்­டது. பொலி­ஸார் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர் விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன.

இந்­தக் கடை­யின் உரி­மை­யா­ள­ரான சுண்­டுக்­குழி, ஈச்­ச­மோட்­டை­யைச் சேர்ந்த அரு­ளா­னந்­தம் சுஜீ­வன் (வயது 35) கடந்த சனிக்­கி­ழமை இரவு இனந்­தெ­ரி­யா­த­வர்­க­ளால் வாளால் வெட்­டப்­பட்­டார்.

அவ­ரது வீட்­டி­னுள் புகுந்த நபர்­கள் அவ­ரைத் துரத்­தித் துரத்தி வெட்­டி­னர் என்று உற­வி­னர்­கள் தெரி­வித்­த­னர். வீட்­டில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த ஆட்­டோ­வை­யும் அவர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். எனி­னும் கோயில் வீதி­யில் செல்­லும்­போது அது கவிழ்ந்­ததை அடுத்து அதைக் கைவிட்­டுத் தப்­பிச் சென்­ற­னர் என்று பொலி­ஸார் கூறி­னர்.

நேற்று அவ­ரது கடை தாக்­கப்­பட்டு அங்கு பணி­யாற்­றி­ய­வர் வெட்­டப்­பட்­டார். சுஜீ­வனை வெளி­யே­விடு என்று கத்­தி­ய­ப­டியே வந்­த­வர்­கள் தாக்­கு­தல் நடத்­தி­னர் என்று நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­த­னர்.

மானிப்­பாய்ப் பகு­தி­யில் நேற்று நடந்த மற்­றொரு சம்­ப­வத்­தில் முச்­சக்­கர வண்­டி­யில் சென்ற ஒரு­வரை துரத்­தித்­து­ரத்தி வாளால் வெட்­டி­யுள்­ள­னர். அவர் அங்­குள்ள வீடு ஒன்­றில் அடைக்­க­லம் புகுந்­துள்­ளார். அந்த வீட்­டி­னுள் புகுந்த வாள்­வெட்­டுக் கும்­பல் அங்­கி­ருந்­த­வர்­க­ளை­யும் வெட்­டி­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இதில் சார­தி­யான ஆனந்­த­ராசா ஜெனிஸ்­க­ரன் ( வயது 35), ராச­துரை ரவி­சங்­கர் (வயது –40 ) அவ­ரது மக­னான ரவி­சங்­கர் பகி­ர­தன்( வயது –17) மற்­றும் பால­சுப்­பி­ர­ம­ணி­யம் சிவ­கு­ரு­நா­தன் (வயது 54) ஆகி­யோர் படு­கா­ய­ம­டைந்­த­னர்.

இதே­போன்று ஆறு­கால்­ம­டம் பகு­தி­யில் இடம்­பெற்ற வாள்­வெட்­டில் குண­சிங்­கம் குண­பி­ர­தீ­பன் (வயது –35) என்­வர் காய­ம­டைந்­தார். வீதி­யால் சென்­ற­போது அவரை வாளால் வெட்­டி­னர் எனப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இரவு 9 மணி­ய­ள­வில் நல்­லூர் முட­மா­வ­டி­யில் உள்ள வீடு ஒன்­றி­னுள் புகுந்த வாள்­வெட்­டுக் குழு­வி­னர் அங்­கி­ருந்த பொருள்­களை அடித்து நொருக்கி வீட்­டி­லி­ருந்­த­வர்­களை அச்­சு­றுத்­தி­விட்­டுச் சென்­றுள்­ள­னர்.

சம்­ப­வங்­க­ளில் காய­ம­டைந்த அறு­வ­ரும் நேற்று இரவு யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். சம்­ப­வங்­கள் தொடர்­பா­கப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர்.

கடந்த நான்கு நாள்­க­ளில் யாழ். குடா­நாட்­டில் இது­போன்ற வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் 8 நிகழ்ந்­துள்­ளன. சனிக்­கி­ழமை இரவு ஈச்­ச­மோட்­டை­யி­லும் ஞாயிற்­றுக்கிழமை இரவு குரு­ந­க­ரி­லும் திங்­கட்­கி­ழமை இரவு மானிப்­பாய் மற்­றும் கோப்­பா­யி­லும் நேற்­றி­ரவு மானிப்­பாய், கோண்­டா­வில், ஆறு­கால்­ம­டம், முட­மா­வடி ஆகிய இடங்­க­ளி­லும் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

வாள் வெட்­டுக் கும்­பல்­க­ளின் அட்­ட­கா­சத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­வெ­னப் பொலி­ஸா­ரின் சுற்­றுக் காவல் பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லும் அவர்­க­ளுக்­குச் சவால்­வி­டும் வகை­யில் இந்­தத் தாக்­கு­தல்­கள் அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்­டுள்­ள­து­டன், நேற்று ஒரே நாளில் 4 இடங்­க­ளி­லும் நடத்­தப்­பட்­டுள்­ளது.

முடமாவடியில் தாக்குதல் நடத்திய அதே கும்பலே கோண்டவிலிலும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மறைகாணொலியில் பதிவான ஈரூறுளி ஒன்றை வைத்தே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*