Peravai

புதிய கூட்டணிக்கு பேரவை மறைமுக ஆதரவு! நழுவிய விக்கி?!

தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் ஆகி­யோர் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் புதிய தேர்­தல் கூட் டுக்கு தமிழ் மக்­கள் பேரவை தனது ஆத­ரவை மறை­மு­க­மா­கத் தெரி­வித்­துள்­ளது.  இருந்தபோதிலும் புதிய கூட்டணியினை தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும் வடக்கு மாகாண சபை முலமைச்சருமான குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்காமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

நேற்று யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் நடைபெற்றிருந்தது. நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பிலான முடிவெட்டப்படுவதற்காகவே முக்கியமாக அந்தக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் இறுதி முடிவெட்டப்படுவதற்கு முன்பாகவே கூட்டத்திலிருந்து வெளியேறிய சி.விக்னேஸ்வரன்,

அங்கிருந்த சில ஊடகர்களிடம், ஈபிஆர்எல்எப் கட்சியினர் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது தவறு என்று தெரிவித்திருப்பதாக தெரியவருகிறது.

அதனிடையே அனேகமாக பேரவையின் அனைத்து தீர்மானங்களையும் அறிவிக்கும் போது பிரசன்னமாகியிருக்கின்ற விக்னேஸ்வரன்,

பேரவையினர் தேர்தல் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட சந்தர்ப்பத்தில் நேற்று அங்கிருக்காது வெளியேறியிருக்கின்றமை அம்பலமாகியிருக்கின்றது.
பேர­வை­யின் கூட்­டம் முடிந்த உட­னேயே, ஈபி­ஆர்­எல்­எவ் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­டன் தேர்­தல் கூட்டு ஒன்றை ஏற்­ப­டுத்­திக்­கொண்டு புதிய முன்­னணி ஒன்­றின் கீழ் உள்­ளு­ராட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டப் போவ­தாக தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் அறி­வித்­தார். தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஆத­ர­வு­டன் அந்த முன்­னணி போட்­டி­யி­ட­வேண்­டும் என்­றும் கோரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

அதன் பின்­னர் மக்­கள் பேரவை வெளி­யிட்ட அறிக்­கை­யில் ‘‘ஒத்த சிந்­த­னை­க­ளு­டன் பய­ணிப்­ப­வர்­க­ளு­டன் கைகோர்த்­துக்­கொள்ள தமிழ் மக்­கள் பேரவை தயா­ரா­கவே உள்­ளது’’ என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­கள் பேர­வை­யி­னால் நேற்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பத்­தி­ரிகை அறிக்­கை­யில் மேலும் முக்­கி­ய­மாக கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

ஒட்­டு­மொத்த சமூ­கப் பங்­க­ளிப்பை ஆக்­க­பூர்­வ­மான, ஆரோக்­கி­ய­மான வழி­யில் எடுத்­துச் செல்­லும் ஓர் வாய்ப்­பா­க–­எ­திர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிற்­கான தேர்­த­லைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வது, தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் பொது­மக்­க­ளின் பங்­கேற்­புக் கொண்ட மக்­க­ளாட்­சிக் கட்­ட­மைப்­புக்­களை மக்­கள் தளத்­தி­லி­ருந்து கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உத­வும் என்று தமி­ழர் தரப்­பின் பல தளங்­க­ளி­லி­ருந்­தும் எழுந்த கோரிக்­கை­யைத் தமிழ் மக்­கள் பேரவை கவ­னத்­தில் கொள்­கி­றது.

உய­ரிய நோக்­கங்­கள் கொண்ட அர­சி­யல் போராட்ட வழி­மு­றை­யில், சமூ­கத்­தின் அடித்­தள அமைப்­பி­லி­ருந்து அதற்­கான பயிற்­சிக் களங்­க­ளைத் திறப்­ப­தும், அர­சி­ய­லி­லும் நிர்­வா­கக் கட்­ட­மைப்­புக்­க­ளி­லும் பொது­மக்­க­ளின் பங்­கேற்பை அதி­க­ரிக்­கக் கூடி­ய­வ­ழி­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தும், காலத்­தின் தேவை அறிந்த உத்­தி­யென்ற புத்­தி­ஜீ­வி­க­ளின் ஆலோ­ச­னையை தமிழ் மக்­கள் பேரவை ஏற்­றுக் கொள்­கின்­றது.

பகி­ரங்­கத் தன்­மை­யான, திறந்த, திறன்­மிக்க அதி­கா­ரப் பொறி­மு­றையை அடித்­தள அமைப்­புக்­க­ளில் உறு­திப்­ப­டுத்­திக் கொள்­ள­வும், ஊழ­லற்ற, அதி­கா­ரப் போட்­டி­க­ளற்ற, மக்­கள் சேவை என்ற மகு­டத்­திற்­குள் நின்று நிலை பெறக்­கூ­டிய நிர்­வா­கங்­களை ஊரக அள­வில் உரு­வாக்­கிக் கொள்­ள­வு­மான ஒரு வாய்ப்பை மிகச் சரி­யான தெரி­வு­க­ளின் அடிப்­ப­டை­யி­லான பிர­தி­நி­தித்­த­வத்­தின் மூலம் பெற­மு­டி­யு­மா­னால், அதற்­கான வழி­காட்­டு­தல்­களை வழங்­கு­வ­தற்­கும், ஒத்த சித்­த­னை­க­ளு­டன் பய­ணிப்­ப­வர்­க­ளு­டன் அதற்­கா­கக் கைகோர்த்­துக் கொள்­ள­வும் தமிழ் மக்­கள் பேரவை தயா­ராக உள்­ளது.

இத்­த­கைய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்­க­ளும் கருத்­துப் பகிர்­வு­க­ளும் தமிழ் மக்­கள் பேர­வை­யி­னால் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*