us

இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க்கப்பல் கொழும்பில்!

ஐக்கிய அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group என்ற மிகப் பெரிய போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தினை சென்றடைந்துள்ளது.  இந்த கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலின் நீளம் 333 மீற்றர் என்பதுடன், ஐயாயிரம் கடற்படையினர் தங்கக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படைக்கிடையில் தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த குழவினரின் வருகை உறுதி செய்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பலின் உயரம் 23 மாடிகள் உயரமுடையது. அதேவேளை இந்த கப்பலின் பயணம் மூலம் இலங்கைக்கு சுமார் 150 கோடி ரூபா பொருளாதார ரீதியில் நன்மை கிடைக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கப்பல் ஒன்று ஏற்கனவே இலங்கைக்கு 1985 ம் ஆண்டு வந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*