hekeliya

சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாகவே இலங்கையில் சமஷ்டியாம்!

சர்­வ­தே­சத்தின் தேவைக்கு அமை­வா­கவே இலங்­கையில் சமஷ்டி முறை­மை க்கு சம­னான ஆட்சி முறையை நிறு­வு­வ­ தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. அந்­த­வ­கை யில் அர­சாங்­கத்தின் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிப்பு முயற்­சியின் பின்­ன­ணியில் சர்­வ­தே­சமே காணப்­ப­டு­கின்­றது என்று முன்னாள் பாது­காப்பு பேச்­சா­ளரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார்.

இலங்­கையில் சமஷ்­டியை உரு­வாக்­கு­வதன் மூலம் வடக்கு பிராந்­தி­யத்­துடன் தனித்து கொடுக்கல் வாங்­கல்­களை செய்­வ­தற்கே சர்­வ­தேச நாடுகள் முயற்­சிக்­கின்­றன. அதற்­கா­கவே இவ்­வாறு இலங்­கைக்குள் சமஷ்டி முறை­மை­யி­லான ஆட்­சியைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் மற்றும் ஒற்­றை­யாட்சி ஒரு­மித்த நாடு போன்ற விட­யங்கள் குறித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்:

ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்டி முறை­மைக்கு ஒப்­பா­ன­தாகும். சில வேளை­களில் அது சமஷ்டி முறை­மையை விட அப்பால் செல்­லக்­கூ­டிய நிலையைக் கொண்­டுள்­ளது. மேலும் தற்­போது அர­சி­ய­ல­மைப்பு வரைபை தயா­ரிக்­காமல் எதற்­காக அறிக்­கையை முன்­வைத்­தார்கள். இந்த விட­யத்தில் என்ன செய்­யப்­பட்­டி­ருக்­க­வேண்டும் என நாம் சிந்­திக்­க­வேண்டும்.

அதா­வது அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் யோச­னை­களைப் பெற்று ஒரு வரைபை தயா­ரித்­தி­ருக்­கலாம். அந்­த­வ­ரைபு குறித்து நாம் விவா­தித்­தி­ருக்­கலாம். ஆனால் அர­சாங்கம் அவ்­வாறு செய்­யாமல் வெறும் அறிக்­கையை மட்டும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. இது சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதே உண்­மை­யாகும்.

மாகா­ண­சபை முறை­மை­யா­னது தற்­போது அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. எனவே அதனை நாம் பலப்­ப­டுத்­தலாம். ஆனால் அதி­லுள்ள குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொள்­வ­தற்­குக்­கூட மாகா­ண­ச­பைகள் முயற்­சிப்­ப­தில்லை.

உதா­ர­ண­மாக வட­மா­காண சபைக்கு 2000 மில்­லியன் வரு­டத்­திற்கு ஒதுக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இறு­தியில் 800 மில்­லி­யன்­களே வழங்­கப்­படும் நிலைமை காணப்­ப­டு­கின்­றது. எனவே இது­தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. ஆனால் மாகா­ண­ச­பை­களை விட பிர­தேச சபை­க­ளுக்கு அதிக அதி­கா­ரங்­களை வழங்­க­வேண்டும் என்­பதே எனது நிலைப்­பா­டாகும்.

எனினும் அர­சாங்கம் இவை எல்­லா­வற்­றையும் விட்­டு­விட்டு சர்­வ­தேச சமூ­கத்தை திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தை முன்­வைத்து அறிக்­கையை வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

இதன்­மூலம் சர்­வ­தே­சத்­திற்கும் பயன்­கி­டைக்­க­வுள்­ளது. அதா­வது சர்­வ­தே­சத்­திற்கு தேவை­யான வகையில் இலங்­கையில் பிராந்­தி­யங்கள் உருவாக்கப்பட்டு சமஷ்டி முறைமை ஏற்படுத்தப்பட்டால் சர்வதேச நாடுகளுக்கு பிராந்தியங்களுடன் சுயாதீனமாக செயற்படும் வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக வடமாகாணத்துடன் தனித்து கொடுக்கல், வாங்கல்களை மேற்கொள்ளவே சர்வதேசம் விரும்புகிறது. அதற்காகவே இலங்கையில் சமஷ்டியை உருவாக்குவதற்கு சர்வதேசம் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*