NAVARKULI

நாவற்குழி விகாரை விவகாரம்; வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் நாவற்­குழி 300 வீட்­டுத் திட்­டப் பகு­தி­யில் சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யில் கட்­டட அங்­கீ­கா­ரம் பெறா­மல் விகா­ரைக் கட்­ட­டம் அமைத்­தமை தொடர்­பான வழக்கு எதிர்­வ­ரும் ஜன­வரி 4 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

சாவ­கச்­சேரி பிர­தேச சபை எல்­லைக்­குட்­பட்ட நாவற்­கு­ழிப் பகு­தி­யில் அரச காணி­யில் சிங்­கள மக்­கள் அத்­து­மீ­றிக் குடி­ய­மர்ந்­துள்­ள­னர்.

அங்கு பிர­தேச சபை­யி­டம் கட்­டட அனு­மதி பெறப்­ப­டா­மல் விகா­ரைக் கட்­ட­டம் அமைத்­த­மைக்கு எதி­ராக பிர­தேச சபைச் செய­லா­ள­ரால் சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­ட­போது பிர­தேச சபை­யி­னால் முன்­வைக்­கப்­பட்ட 5 கோரிக்­கை­க­ளை­யும் பூர்த்தி செய்து வழங்­கு­மாறு விகா­ரா­தி­ ப­திக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டது.

கோரப்­ப­டும் ஆவ­ணங்­கள் சமர்ப்­பிக்­கப்­ப­டும் பட்­சத்­தில் தாம­திக்­கா­மல் கட்­டட அங்­கீ­கா­ரம் வழங்­கு­மாறு பிர­தேச சபை செய­லா­ள­ருக்­கும் நீதி­மன்று பணித்­தி­ருந்­தது. வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*