jayampathi

இலங்கையில் வானூர்தி தயாரிப்பில் ஈடுபடப்போகிறதாம் விமானப்படை!

இலங்­கை­யில் முதல் தட­வை­யாக வான் படை­யி­னர் வானூர்தி தயா­ரிப்புப் பணி­யில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக விமானப்படைத் தள­பதி எயார் மார்­சல் கபில ஜயம்­பதி தெரி­வித்­தார். கண்டித் தலதா மாளி­கை­யில் நடை­பெற்ற மத வழி­பா­டு­க­ளில் கலந்துகொண்­ட­போதே அவர் இதனைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

வான்­ப­டை­யி­னூ­டாக வானூர்­தி­களை நிர்­வ­கிக்­கும் நட­வ­டிக்­கை­களே இடம்­பெற்­றுள்­ளன. பாது­காப்­புச் செய­ல­ரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக வானூர்­தி­களை இங்கு தயா­ரிப்­ப­தற்­குத் தேவை­யான முன்­னெ­டுப்­புக் ­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. தேவை­யான இடம், சூழல், உற்­பத்திப் பொறிகள் நிறை­வ­டைந்த பின்­னர் அடுத்த ஆண்டு முதல் வானூர்­தி­களை உற்­பத்தி செய்­யும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும்.

போர்க் காலத்­தில் போர் கார­ண­மாக வானூர்­தி­கள் சேத­ம­டைந்­தா­லும் தற்­பொ­ழுது பற­வை­க­ளி­னால் சேதம் ஏற்­ப­டு­கி­றது.

எமது நாட்­டிற்­கு­ரிய பன்­னாட்­டுக் கடற்­ப­ரப்பைப் பாது­காப்­ப­தற்­கும், நாட்­டிற்­குள் சட்­ட­ வி­ரோ­த­மாகப் பொருள்­கள் எடுத்து வரப்­ப­டு­வதைத் தடுக்­க­வும் கடற்­ப­டை­யு­டன் இணைந்து கண்­கா­ணிப்பு மற்­றும் சிறப்புப் பாது­காப்பு முன்­னெ­டுப்­பு­களைச் செய்து வரு­கி­றோம்.

எமது நாட்­டில் வானூர்­தி­களை உற்­பத்தி செய்­யும் அதே­வேளை, நாட்­டிற்கு உகந்த தொழில்­நுட்­பத்­து­டன் கூடிய வானூர்­தி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கும் வான்­படை திட்­ட­மிட்­டுள் ­ளது – – என்­றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*