pootham

மைத்திரி காட்டும் பூதம்!!

“விரோ­தங்கள் வன்­மு­றை­களின் மூலம் என்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய சக்­திகள் தான் பலம் பெறும்” – கடந்த 13ஆம் திகதி யாழ்ப்­பாணம் இந்துக் கல்­லூ­ரியில் நடந்த தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறிய விட­யமே இது.

இந்த விழாவில் பங்­கேற்க யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக போராட்டம் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தி போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கடந்து சென்ற போது, வாக­னத்தை விட்டுக் கீழே இறங்கி, அவர்­க­ளுடன் பேச்சு நடத்­தி­யி­ருந்தார் ஜனா­தி­பதி.

அதற்குப் பின்னர், தமிழ்­மொழித் தின விழாவில் உரை­யாற்­றிய போதே, தன்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால், தீய­சக்­திகள் பலம் பெறும் என்று அவர் கூறி­யி­ருந்தார். இதனை அறி­வுரை என்று எடுத்துக் கொள்­வதா- அல்­லது எச்­ச­ரிக்கை என்று எடுத்துக் கொள்­வதா என்­பது அவ­ரவர் பார்வைக் கோணத்தைப் பொறுத்த விடயம். ஆனாலும், தன்னைப் பல­வீ­னப்­ப­டுத்­தினால் தீய­சக்­திகள் பலம் பெறும் என்­பது போன்ற கருத்­து­களின் ஊடாக, ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும், தமிழ் மக்­களின் கோரிக்­கைகள், நியா­யங்கள், உரி­மை­களை அடக்­கு­வ­தற்கே முனை­கின்­றனர் என்­பது வெளிப்­படை.

யாழ்ப்­பா­ணத்தில் ஜனா­தி­பதி மாத்­திரம் இந்தக் கருத்தைக் கூற­வில்லை. அது­போல, தமிழர் தரப்பை நோக்கி இது முதல் முறை­யாகக் கூறப்­பட்ட கருத்தும் அல்ல. அண்­மையில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் ஒரு செவ்­வியில் இது­பற்றி விரி­வாகக் கூறி­யி­ருந்தார். “அர­ச­த­ரப்பில் உள்­ள­வர்கள் எம்­முடன் வந்து நன்­றாக கலந்­து­ரை­யா­டு­வார்கள். நாங்கள் அவர்­க­ளிடம் எமது கோரிக்­கை­களை முன்­வைப்போம். அதனை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­றுதி அளித்து விட்டுப் போவார்கள். ஒன்றும் நடக்­காது.

பின்­பொ­ரு­முறை சந்­திக்கும் போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என்று கேட்டால், அதனை நிறை­வேற்­றினால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைக் கவிழ்த்து விடுவார், அவர் மீண்டும் ஆட்­சிக்கு வந்து விடுவார் என்று பயம் காட்­டு­கி­றார்கள்” என்று அவர் கூறி­யி­ருந்தார். அதா­வது தமிழ் மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தற்­கான வாக்­கு­று­தி­களைக் கூடக் காப்­பாற்ற முடி­யாத அர­சாங்­க­மாகத் தான் இது இருக்­கி­றது.

இத்­த­கைய தரு­ணங்­களின் போதெல்லாம், தீய­சக்­திகள் பலம் பெறும் என்றோ, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைக் கவிழ்த்து விடுவார் அல்­லது அதி­கா­ரத்­துக்கு வந்து விடுவார் என்றோ பய­மு­றுத்­து­வது தான் அர­சாங்­கத்தின் வழக்­க­மாக மாறி­யி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷவை அல்­லது தீய­சக்­தி­களைக் காண்­பித்து தமி­ழர்­களைப் பய­மு­றுத்தி, அவர்கள் தரப்பு நியா­யங்­களை அர­சாங்கம் அமுக்கப் பார்க்­ கி­றதோ என்ற சந்­தேகம் தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் ஒரு தசாப்த ஆட்­சிக்­காலம் என்­பது, தமி­ழர்­களைப் பொறுத்­த­வ­ரையில் மிக மோச­மா­னது என்­பதில் மாற்றுக் கருத்­துக்கு இட­மில்லை. படு­கொ­லைகள், போர்க்­குற்­றங்கள், காணாமல் ஆக்­கப்­ப­டு­தல்கள், கைதுகள், சித்­தி­ர­வ­தைகள், இடம்­பெ­யர்­வுகள் என்று இந்த ஆட்­சிக்­கா­லத்தில் தமி­ழர்கள் சந்­தித்த துன்ப துய­ரங்கள், முன்­னைய எந்­த­வொரு ஆட்­சிக்­கா­லத்­திலும் அனு­ப­வித்­தி­ரா­தவை.

சர்­வ­தேச நாடுகள் பல­வற்­றினால் கூட இன்று எதேச்­சா­தி­கார ஆட்சி என்று வர்­ணிக்­கப்­படும் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சியில், தமிழ் மக்கள் மோச­மாக நடத்­தப்­பட்­டனர். மோச­மான வாழ்வு நிலைக்குள் சிக்­கி­யி­ருந்­தனர். அதி­லி­ருந்து வெளியே வர வேண்டும் என்­ப­தற்­காக மாத்­திரம், தமிழ் மக்கள் ஒன்­றி­ணைந்து, 2015 இல்­ஆட்சி மாற்­றத்தை நிகழ்த்­த­வில்லை.

தமக்கு நீதியும், நியா­யமும், உரி­மையும், அதி­கா­ரங்­களும் கிட்ட வேண்டும் என்­ப­தற்­கா­கவும் தான், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகச் தெரிவு செய்­வ­தற்குத் தமிழ் மக்கள் துணை நின்­றனர்.

மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில், தமிழ் மக்கள் மிக மோச­மான சூழ்­நி­லைக்குள் இருந்த போதும் கூட, தமது கோரிக்­கைகள், உரி­மைகள், அதி­கா­ரங்கள் விட­யத்தில், ஒரு­போதும் விட்­டுக்­கொ­டுக்­கவோ, போரா­டாமல் ஒதுங்­கி­யி­ருக்­கவோ இல்லை. அடக்­கு­மு­றை­க­ளுக்கு மத்­தி­யிலும், தமது எதிர்ப்­பு­களை சாத்­தி­ய­மான வழி­களில் எல்லாம் வெளிப்­ப­டுத்திக் கொண்­டே­யி­ருந்­தனர்.

2015 ஆட்சி மாற்றம், புதிய சூழ­லையும், ஜன­நா­யக இடை­வெ­ளி­யையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இந்த மாற்­றத்­தினால் தான், ஜனா­தி­பதி பங்­கேற்கும் நிகழ்­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்­தையும் நடத்த முடிந்­தி­ருக்­கி­றது. இதுவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் என்றால், அதி­கார பலத்தைக் கொண்டு அடக்­கப்­பட்­டி­ருக்கும் அல்­லது அகற்­றப்­பட்­டி­ருக்கும்.

அதற்­காக தற்­போ­தைய அர­சாங்கம், போராட்­டங்­களை அனு­ம­திக்­கி­றது என்­ப­தற்­காக, அதற்­கான சூழல் விட்டு வைக்­கப்­பட்­டுள்­ளது என்­ப­தற்­காக, தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளையோ, உரி­மை­க­ளையோ, அதி­கா­ரத்­தையோ நியா­ய­மற்­ற­தாக காட்­டு­வது அல்­லது விட்­டுக்­கொ­டுக்க வேண்டும் என்று வலி­யு­றுத்­து­வது தவ­றா­னது.

மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்கு வந்து விடுவார் என்று கூறி, பேசாமல் அமை­தி­யாக இருக்கச் செய்­வது தான், அர­சாங்­கத்தின் உத்­தி­யாக இருக்­கி­றது. அவ்­வா­றாயின், தமிழ் மக்­களின் கோரிக்­கை­க­ளான, அடிப்­படை உரி­மை­க­ளையும், அதி­கா­ரத்­தையும் எப்­போது கோரு­வது, எப்­போது அதற்­கான போராட்­டங்­களை நடத்­து­வது? ஓர் அர­சாங்கம் என்­பது ஒரு­போதும் நூறு வீதம் பாது­காப்­பா­னது என்று கூற­மு­டி­யாது. அதுவும் ஜன­நா­யக அர­சியல் சூழல் உள்ள நாடு­களில், நிலை­யான அர­சாங்கம் இருப்­பது போலத் தோற்­ற­ம­ளித்­தாலும், அதற்குப் பின்னால் ஆபத்து ஒளிந்து கொண்­டே­யி­ருக்கும்.

ஆளும்­கட்­சியைப் பிள­வு­ப­டுத்தி, அல்­லது தமது பக்கம் இழுத்து என்று பல்­வேறு வழி­களில் ஆட்­சியைக் கவிழ்க்க முனை­வது வழக்கம். எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யி­னதும் பிர­தான இலக்கு ஆட்­சியை. அதி­கா­ரத்தைப் பிடிப்­பது தான். அந்த இலக்­கில்­லாமல் நடத்­தப்­படும் கட்­சி­களால் ஒரு­போதும் உருப்­ப­டவே முடி­யாது. அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக மோது­வதும், போரா­டு­வதும் தான் அர­சியல். அதி­கா­ரத்தில் இருந்து தோன்­றி­யது தான் அரசு. இங்­கேயும் அதில் எந்த மாற்­றமும் இல்லை.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியைப் பிடிக்க முனை­வதும், அதனைத் தடுப்­ப­தற்­கான காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுப்­பதும் தான், அர­சி­யலில் நிலைத்­தி­ருப்­ப­தற்­கான ஒரே வழி. தன்னைத் தெரிவு செய்த மக்கள் கூட்­டத்தின் கோரிக்­கை­க­ளையும், தேவை­க­ளையும் நிறை­வேற்­று­வதே ஒரு அர­சாங்­கத்தின் கடமை. அந்தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான வழி­களைத் தேடு­வ­தற்குப் பதி­லாக, அதி­லி­ருந்து விடு­பட்டு ஓடி ஒளி­வ­தற்­கான வழி­க­ளையே தேடு­கி­றது தற்­போ­தைய அர­சாங்கம்.

அர­சாங்கம் எதைச் செய்யப் போகி­றது என்­பதை, எதிர்க்­கட்­சியே தீர்­மா­னிக்­கி­றது என்ற நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இதுதான் மிகவும் பல­வீ­ன­மான ஓர் அர­சாங்­கத்தின் அறி­குறி. தற்­து­ணிவின் பேரில் முடி­வு­களை எடுத்துச் செயற்­படத் திரா­ணி­யற்ற அர­சாங்­கங்கள் தான் எதிர்க்­கட்­சியைக் காரணம் கூறும். அத்­த­கைய நிலையில் தான் தற்­போ­தைய அர­சாங்கம் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. அதி­கார ஆச­னத்தை இறுகப் பற்றிக் கொண்­டி­ருப்­பது மாத்­திரம் முக்­கி­ய­மல்ல. அதனை மக்­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்திக் கொள்­வதும் முக்­கியம். அதுதான் ஆட்­சியை நிலைப்­ப­டுத்தும்.

தற்­போ­தைய அர­சாங்கம் எதற்­கெ­டுத்­தாலும், மஹிந்த என்ற பூதத்தைக் காட்டி தமிழ் மக்­களின் வாயை அடைக்கப் பார்க்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ போன்ற எதிர்த்­த­ரப்­பி­னரால் அர­சாங்கம் மாத்­திரம் நெருக்­க­டி­களை எதிர்­கொள்­ள­வில்லை.

தெற்கில் நடப்­பது போன்ற இதே இழு­பறிப் போர் வடக்­கிலும் நடக்­கி­றது. அர­சாங்­கத்­துடன் ஒத்­து­ழைத்துச் செயற்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் இதே பிரச்­சினை இருக்­கி­றது. அர­சாங்­கத்­துடன் விட்­டுக்­கொ­டுத்துச் செயற்­ப­டு­வ­தாலும், அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் போன்ற விட­யங்­க­ளுக்கு இணங்கிப் போவ­தாலும், தமிழர் தரப்பில் உள்ள கடும்­போக்­கா­ளர்­களின் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளையும் எதிர்ப்­பையும் கூட்­ட­மைப்பு சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

அந்த எதிர்ப்­பு­களைக் கண்டு சம்பந்தன், தனது பாதையை மாற்றிக் கொள்ளவில்லை. தமது அரசியல் எதிர்காலம் பற்றிய அச்சங்களை உதறி விட்டு அவர், தெரிவு செய்த வழியில் பிரச்சினைக்குத் தீர்வு காண முனைகிறார். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, மஹிந்த ராஜபக் ஷ என்று பயமுறுத்தி, காலத்தைக் கடத்த முனைகிறார். அரசாங்கம் தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் இருந்து நழுவிக் கொள்வதற்கான ஒரு காரணியாக மஹிந்த ராஜபக் ஷவை காண்பித்து வருகிறது. தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதற்காக மஹிந்த ராஜபக் ஷவை ஒரு பூதமாக காண்பிக்கிறது. ஆனால், இந்த பயமுறுத்தல்கள் நீண்டகாலத்துக்கு பயனளிக்காது என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

‘தெரியாத பேயை விட தெரிந்த பூதமே மேல்’ என்று கூறும் வழக்கம் ஒன்று உள்ளது. தமிழ் மக்களும், அப்படியொரு முடிவை எடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.

என். கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*