indi

இந்தியாவை சீண்டும் மஹிந்த அணி!!

முதல் தடவை நிதி மோசடிக் குற்­றச்­சாட்டில் சிறைக்குச் சென்ற பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ, இந்­தி­யா­வுக்கு எதி­ராகப் போராட்டம் நடத்­தி­யதால், இரண்­டா­வது தட­வை­யாக சிறைக்குச் சென்­றி­ருக்­கிறார். மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், இடம்­பெற்ற நிதி மோச­டிகள், முறை­கே­டுகள் குறித்து விசா­ரிக்கும் நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாமல் ராஜபக் ஷ முதல் முறை­யாக கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அப்­போது அவர் வெலிக்­கடைச் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்டார். நாமல் மீது வீண்­பழி சுமத்­தப்­பட்­ட­தாகக் கூறி, அந்தக் கைது நட­வ­டிக்­கையை அர­சியல் பழி­வாங்­க­லாக சமா­ளித்துக் கொண் ­டது மஹிந்த அணி.

இப்­போது, நீதி­மன்ற உத்­த­ரவை மீறி போராட்டம் நடத்­தி­ய­தற்­காக கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்கக் கூடாது என்­ப­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இந்தப் போராட்டம் கடந்த, 6ஆம் திகதி நடத்­தப்­பட்­டது. அம்­பாந்­தோட்­டையில் உள்ள இந்­தியத் துணைத் தூத­ர­கத்­துக்கு முன்­பாக நடத்­தப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது, பொலிஸார் கண்ணீர் புகைக்­குண்­டு­களை வீசி­யி­ருந்­தார்கள். நீர்த்­தாரைப் பிர­யோ­கமும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

ஆர்ப்­பாட்டம் நடத்­து­வ­தற்கு அம்­பாந்­தோட்டை நீதி­மன்றம், நாமல் ராஜபக் ஷவுக்கு தடை விதித்­தி­ருந்­தது, அதனை மீறியே அந்த ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. நீதி­மன்ற உத்­த­ரவை மதிக்­கிறோம், ஆனால் திட்­ட­மிட்­ட­படி ஆர்ப்­பாட்டம் நடத்­துவோம் என்று கூறி விட்டுச் சென்றே போராட்டம் நடத்­தி­யி­ருந்தார் நாமல்.

நீதி­மன்ற தடை உத்­த­ரவைத் தெரிந்து கொண்டே போராட்­டத்தை நடத்­தி­ய­தாக கூறி­யி­ருந்தார் வாசு­தேவ நாண­யக்­கார. நாமல் ராஜபக் ஷ, ஜி.எல்.பீரிஸ் போன்ற, கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் பலரும் சட்­டத்­த­ர­ணி­க­ளாக இருந்த போதும், நீதி­மன்­றத்தை மதித்துச் செயற்­படத் தயா­ராக இருக்­க­வில்லை. அதனை மீறி போராட்­டத்தை நடத்­தி­னார்கள். அதற்­காக கைது செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாமல் ராஜபக் ஷ கைது செய்­யப்­பட்ட போது, இந்­தி­யா­வுக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­திய முன்னாள் ஜனா­தி­ப­தி யின் மகன் கைது என்றே சர்­வ­தேச ஊட ­கங்கள் செய்தி வெளி­யிட்­டன.

இந்­திய நிறு­வ­னத்­துக்கு மத்­தள விமான நிலை­யத்தை குத்­த­கைக்கு வழங்­கு­வ­தற்கு எதி­ராக- இந்­தியத் துணைத் தூத­ர­கத்­துக்கு முன்­பாக போராட்டம் நடத்­தி­யி­ருந்த போதிலும், தமது போராட்டம் இந்­தி­யா­வுக்கு எதி­ரா­னது அல்ல என்று காட்டிக் கொள்­ளவே நாமல் ராஜபக் ஷ விரும்­பி­யி­ருந்தார்.

ஆர்ப்­பாட்டம் முடிந்த பின்னர் அவர் டுவிட்­டரில் இட்­டி­ருந்த பதிவு ஒன்றில், எமது எதிர்ப்பு முத­லீட்­டுக்கோ அல்­லது எந்­த­வொரு நாட்­டுக்கோ எதி­ரா­னது அல்ல. இலங்கை அர­சாங்­கத்­துக்கும் அதன் கொள்­கை­க­ளுக்­குமே எதி­ரா­னது என்று கூறி­யி­ருந்தார். இந்­திய தூத­ர­கத்­துக்கு முன்­பாக, போராட்­டத்தை நடத்தி விட்டு, இலங்கை அர­சுக்கு எதி­ரா­கவும் அதன் கொள்­கை­க­ளுக்கு  எதி­ரா­க­வுமே போராட்டம் நடத்­தப்­பட்­ட­தாக வெளிப்­ப­டுத்த முயன்­றி­ருந்தார் நாமல் ராஜபக்ஷ.

இந்­தி­யா­வுக்கு மத்­தள விமான நிலை­யத்தை வழங்­கு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்துக் கொண்டே, இந்­தி­யா­வுக்கு எதி­ராகச் செயற்­ப­ட­வில்லை என்று காட்டிக் கொள்­வ­திலும் அவர் ஈடு­பட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் கூட இந்­தி­யா­வுக் கும் சீனா­வுக்கும் அரு­க­ருகே உள்ள இடங் ­களை வழங்­கு­வதால் அதி­காரப் போட்­ டியே மேலோங்கும் என்று நாமல் ராஜபக் ஷ எச்­ச­ரித்­தி­ருந்தார்.

எனினும், இந்­திய துணைத் தூத­ரகம் முன்­பாக போராட்­டத்தை நடத்­திய பின் னர், தமது எதிர்ப்பு இந்­தி­யா­வுக்கு எதி­ரா­னது அல்ல என்று நாமல் ராஜபக் ஷ குத்­துக்­க­ரணம் அடிக்க முயன்­றமை சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது.

இந்த ஆர்ப்­பாட்­டத்தில் மஹி­ந்த ராஜபக் ஷவின் மூத்த சகோ­த­ரரும், முன்னாள் சபா­நா­ய­கரும், அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ ­பக் ஷவும் பங்­கேற்­றி­ருந்தார். அவர் அம்­பாந்­தோட்டை துறை­முகம் வழி­யாக உள்ள சீனாவின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு அஞ்சி, இந்­தியா மத்­தள விமான நிலை­யத்தை பல­வந்­த­மாக அப­க­ரிக்கப் பார்க்­கி­றது என்று குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

நாட்டின் தேசிய வளங்­களை அர­சாங்கம் விற்க முனை­கி­றது என்று ராஜபக் ஷ குடும்­பத்­தி­னரும், கூட்டு எதி­ர­ணி­யி­னரும் குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்­தாலும், இந்­தி­யாவின் கையில் மத்­தள விமான நிலையம் சென்று விடக்­கூ­டாது என்­பதே, அவர்­களின் பிர­தான நோக்­க­மாக இருக்­கி­றது.

அதே­வேளை, பகி­ரங்­க­மாக இந்­தி­யா­வுக்கு எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­வதால் தமது எதிர்­கால அர­சி­ய­லுக்கு ஆபத்து ஏற்­ப­டுமோ என்ற பயமும் அவர்­க­ளிடம் இருந்து வரு­வதை மறுக்க முடி­யாது.

இந்­தி­யா­வுக்கு எதி­ராக போராட்­டத்தை நடத்தி விட்டு நாமல் ராஜபக் ஷ குத்­துக்­க­ரணம் அடித்­தது அதனால் தான். இந்­தி­யாவின் நலன்­களைப் புறக்­க­ணித்து. சீனா­வுடன் இணைந்து செயற்­பட முனைந்­ததன் விளை­வா­கவே மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியை இழக்க நேரிட்­டது. அது­போன்­ற­தொரு சூழல் மீண்டும் ஏற்­பட்டு விடக்­கூ­டாது என்­பதில் ராஜபக் ஷ குடும்­பத்­தினர் கவ­ன­மா­கவே இருக்­கி­றார்கள் என்றே தெரி­கி­றது.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­திய நிறு­வனம் ஒன்­றுக்கு வழங்­கு­வது பற்­றிய பேச்­சுக்கள் நடத்­தப்­பட்டு வந்­தாலும் அது தொடர்­பான இறு­தி­யான எந்த முடி­வு­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இந்­திய நிறு­வனம் மத்­தள விமான நிலை­யத்தை குத்­த­கைக்குப் பெற்றுக் கொள்­வது குறித்து விருப்பம் தெரி­வித்­த­துடன் சரி, அதற்குப் பின்னர் எந்த திட்­டத்­தையும் சமர்ப்­பிக்­க­வில்லை. அதனை சமர்ப்­பித்தால் தான், தொடர்ந்து பேச முடியும் என்று அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்வா கூறி­யி­ருந்தார்.

மத்­தள விமான நிலை­யத்தின் மீது இந்­தி­யா­வுக்கு ஒரு கண் இருப்­பது ஆச்­ச­ரி­ய­மில்லை. அம்­பாந்­தோட்டை துறை­முகம் சீனா­விடம் இருக்கும் நிலையில், மத்­த­ளவைக் கையில் வைத்­தி­ருந்தால் சீனாவைக் கண்­கா­ணிப்­பது வச­தி­யாக இருக்கும்.

ஆனால் இலங்கை அர­சாங்­கமோ, அதன் குத்­தகை உரி­மையை அதி­க­ளவில் விட்­டுக்­கொ­டுக்­கவோ, பாது­காப்பு உரி­மையை விட்டுக் கொடுக்­கவோ தயா­ராக இல்லை. குறிப்­பாக கட்­டுப்­பாட்டுக் கோபு­ரத்தை விமா­னப்­ப­டை­யி­னரின் கண்­கா­ணிப்பில் வைத்­தி­ருக்­கவே விரும்­பு­கி­றது.

இது­போன்ற சிக்­கல்­களால், இந்த உடன்­பாடு இழு­ப­றி­யாக இருக்­கி­றது.

ஆனால், கூட்டு எதி­ர­ணியோ, அதற்­குள்­ளா­கவே மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்கும் திட்­டத்­துக்கு எதி­ராக ஆர்ப்­பாட்­டத்தை நடத்தி தமது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரத்­திலும் இவ்­வாறு தான் போராட்டம் நடத்­தப்­பட்­டது. ஆனாலும் துறை­முக உடன்­பாடு எந்த தடையும் இன்றி கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யாவும் அவ்­வ­ளவு இல­கு­வாக விட்டுக் கொடுக்­காது. இதுவும் கூட்டு எதி­ர­ணிக்குத் தெரி­யாத விட­ய­மல்ல.

ஆனால், தற்­போ­தைய அர­சியல் சூழலில், அர­சாங்­கத்­துக்கு எதி­ராக, குற்­றச்­சாட்­டு­களை திருப்பி விடு­வ­தற்கு கூட்டு எதி­ரணி இரண்டு வாய்ப்­பு­களை வைத்­தி­ருக்­கி­றது. ஒன்று புதிய அர­சி­ய­ல­மைப்பு. அதன் மூலம் சமஷ்டித் தீர்வைக் கொடுத்து நாட்டைப் பிள­வு­ப­டுத்தப் போகி­றது அர­சாங்கம் என்ற பிர­மையை உரு­வாக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது,

இன்­னொன்று நாட்டின் தேசிய வளங்­களை அர­சாங்கம் வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கி­றது என்­பது. மத்­தள விமான நிலை­யத்தை இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்கு எதி­ரான போராட்டம் இத்­த­கை­யது தான். உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான அனைத்துத் தடை­களும் நீக்­கப்­பட்டு விட்ட நிலையில் எப்­ப­டியும் வரும் ஜன­வரி மாதம், உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடப்­பது உறுதி.

இதற்கு மேலும் தேர்­தல்­களை இழுத்­த­டித்தால், அது அர­சாங்­கத்­துக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதை ஜனா­தி­பதி உணர்ந்­தி­ருக்­கிறார். எனவே, ஜன­வ­ரியில் எப்­ப­டியும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் நடத்­தப்­படும் என்­பதால், அதற்கு இன்னும் இரண்டு மாதங்­களே உள்ள நிலையில், சிங்­கள மக்­களை தேர்தல் காய்ச்­ச­லுக்குள் கொண்டு வர கூட்டு எதிரணி முனைகிறது.

சிங்கள மக்களுக்குப் பொதுவாகவே இந்தியா மீது ஒரு அச்சமும் வெறுப்பும் உள்ளது. எங்கே இலங்கையை தமது ஒரு மாநிலமாக கைப்பற்றிக் கொள்ளுமோ, தமிழீழத்தைப் பிரித்துக் கொடுத்து விடுமோ என்று அவர்கள் கடந்த காலங்களில் அஞ்சினர்.

இப்போதும் கூட இந்தியாவை அவர்கள் அச்சத்துடன் பார்க்கின்ற நிலையே உள்ளது. மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை சிங்கள மக்கள் அத்தகைய அச்சத்துடன் பார்க்கின்ற நிலையை தோற்றுவித்தால், தேசிய உணர்வுகளைத் தட்டியெழுப்பி இலகுவாக வெற்றியைப் பெறலாம் என்று கூட்டு எதிரணி நிச்சயம் கணக்குப் போட்டிருக்கும்.

தடைகளை மீறி நாமல் ராஜபக் ஷபோராட்டம் நடத்தியதும், சிறைக்குச் சென்றிருப்பதும், இந்தியாவின் விரோதத்தை சம்பாதிக்கிறதோ இல்லையோ, உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதலீடாகத் தான் இருக்கும்.

– சத்ரியன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*