election

ஜனவரி மாதத்திற்குள் தேர்தல் என்கிறது அரசாங்கம்!

மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் ஒரு வாரத்­திற்குள் வெளி­யி­டப்­படும் என சபையில் தெரி­வித்த மாகாண சபைகள் மற்றும் உள்ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அமைச்சர் பைஸர் முஸ்­தபா எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் தேர்தல் நடை­பெ­று­வது உறுதி எனவும் திட்­ட­வட்­ட­மாக குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட மூலங்கள் மீதான இரண்டாம் மதிப்­பீட்டு விவா­தத்­தினை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மாந­கர, நகர, பிர­தேச திருத்­தச்­சட்ட மூலங்­களை நாம் முன்­வைக்­கின்ற இந்த சந்­தர்ப்­பத்தில் பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தேர்­தலை பிற்­போ­டு­வ­தற்­கா­கவே இவ்­வா­றான திருத்­தங்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் குற்றம் சாட்­டு­கின்­றார்கள்.

உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்­டங்கள் தொடர்­பான வர­லாற்­றினை எடுத்­துப்­பார்க்­கையில் 2012ஆம் ஆண்டு உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் திருத்­தச்­சட்ட மூலம் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த திருத்­தச்­சட்ட மூலத்தில் 70சத­வீதம் தொகுதி வாரி முறை­மையும் 30சத­வீதம் விகி­க­தா­சர முறை­மையும் கொண்ட கலப்பு முறை­மை­யொன்றே முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்­தது. இந்த முன்­மொ­ழி­வா­னது சிறு மற்றும் சிறு­பான்மைக் கட்­சி­க­ளுக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்­து­வ­தாக காணப்­பட்­ட­தாக அத்­த­ரப்­புக்கள் எமது கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருந்­தன.

அதில் உண்­மை­களும் இருந்­தன. குறிப்­பாக நூற்­றுக்கு 23சத­வீதம் சிறு மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வது அவ­தா­னிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து இடம்­பெற்­றி­ருந்த கலந்­து­ரை­யா­டல்­களின் மூலம் 60சத­வீதம் தொகு­தி­வாரி பிர­தி­நி­தித்­து­வத்­தையும் 40சத­வீதம் விகி­தா­சார பிர­தி­நி­தித்­து­வத்­தையும் கொண்ட கலப்பு முறைமை அனை­வரால் ஏற்­றக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. இதன் மூலம் பல்­வேறு தரப்­பி­னரால் விமர்­சிக்­கப்­பட்­டு­வந்த விகி­தா­சார பிர­தி­நி­தித்­துவ தேர்தல் முறைமை நீக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தற்­போது மாந­கர, நகர, பிர­தேச சட்­டத்தில் 5ஆம் விதியில் உள்ள உறுப்­பு­ரை­யி­லேயே திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்­கைகள், நிரு­வாகம் சம்­பந்­த­மான தொழில்­நுட்ப விட­யங்கள் ஆகி­ய­ன­வற்­றி­லேயே சிறு­மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் தற்­போ­தைய சூழலில் நாட்டின் அர­சி­யலில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வத்­தினை ஊக்­கு­விக்கும் வகை­யி­லான மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதும் அனைத்து அர­சியல் கட்­சி­க­ளாலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­ய­மாகும்.

அதற்­க­மை­வாக தற்­போ­தைய உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான ஏற்­பாட்டின் பிர­காரம் நூற்­றுக்கு 5தவீ­த­மான பெண் பிர­தி­நி­தித்­து­வமே காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் பெண்­களின் பிர­தி­நி­தித்­து­வங்கள் 25சத­வீ­த­மாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ளன.

தேர்­தலை நடத்­தாது விடு­வ­தற்­கா­கவோ அல்­லது ஒத்தி வைத்து கால­த­மா­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவோ நாம் இவ்­வா­றான திருத்தங்களை மேற்கொள்ளவில்லை. தேர்தலை நிறுத்துவதற்கு இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதாக கூட்டு எதிரணியினர் குற்றம் சாட்டுவதானது அரசியல் இலாபத்தினைப் பெற்றுக்கொள்வதற்காவேயாகும்.

நாம் ஜனவரி மாதத்திற்குள் நிச்சயமாக தேர்தலை நடத்துவோம் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன். ஒருவாத்திற்குள் மாநகர, நகர, பிரதேச திருத்தச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் நிச்சயமாக வெளியிடப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*