pali3e

போர்க்கப்பலுக்காக பலிக்கடா? – சுபத்ரா

கிட்­டத்­தட்ட நான்கு தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர், இலங்கைக் கடற்­ப­டையின் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட முதல் தமிழர் என்று சர்­வ­தேச ஊட­கங்­க­ளாலும் வர்­ணிக்­கப்­பட்­டவர் வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னையா. அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னை­யாவை ஒரு தமிழர் என்று அடை­யா­ளப்­ப­டுத்­தியே ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டன. அது பர­ப­ரப்­பான செய்­தி­யா­கவும் அமைந்­தி­ருந்­தது. ஆனால், அவ­ரது தாய்­மொழி சிங்­களம் என்­பது பல­ருக்குத் தெரி­யாத விடயம்.

எவ்­வா­றா­யினும், மீண்டும் ஒரு தமி­ழ­ருக்கு கடற்­படைத் தள­பதி பதவி கிடைத்­தி­ருப்­ப­தாக செய்­திகள் வெளி­யா­கிய பர­ப­ரப்பு அடங்­கு­வ­தற்­குள்­ளா­கவே, குறு­கிய காலம் பத­வியில் இருந்த கடற்­படைத் தள­பதி என்ற பெய­ரையும் அவரே பெற்று விடு­வாரோ என்ற பர­ப­ரப்பு பல­ரிடம் தொற்றிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஏனென்றால், வைஸ் அட்­மிரல் சின்­னையா வரும் 26ஆம் திக­திக்குப் பின்­னரும் கடற்­படைத் தள­ப­தி­யாக நீடிப்­பாரா என்ற சந்­தேகம் தான் அதற்குக் காரணம்.கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி கடற்­படைத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னை­யா­வுக்கு செப்­டெம்பர் 26ஆம் திக­தி­யுடன், 55 வயது நிறை­வ­டைந்து விட்­டது.

முப்­ப­டை­க­ளிலும் இருப்­ப­வர்கள் 55 வயது வரையே பணியில் இருக்க முடியும். அதற்குப் பின்னர், சேவையில் இருக்க வேண்­டு­மானால், ஜனா­தி­ப­தியின் சேவை நீடிப்பு அனு­ம­தியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

கடற்­படைத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்ட ஒரு மாதத்­தி­லேயே, வைஸ் அட்­மிரல் சின்­னையா சேவை நீடிப்­புக்­காக ஜனா­தி­ப­தி­யிடம் விண்­ணப்­பிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. ஆனால், அவ­ருக்கு ஒரு மாத சேவை நீடிப்­பையே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வழங்­கி­யி­ருக்­கிறார்.

55 வயதைக் கடந்த படை அதி­கா­ரிகள், தள­ப­தி­க­ளுக்கு 3 மாதம், 6 மாதம், ஒரு வருடம் என்று தேவையைப் பொறுத்து சேவை நீடிப்பை வழங்க முடியும். சில­வே­ளை­களில் இரண்டு ஆண்­டுகள் சேவை நீடிப்பு வழங்­கப்­பட்ட வர­லாறும் இருக்­கி­றது. அப்­ப­டி­யான நிலையில், கடற்­படைத் தள­பதி ஒரு­வ­ருக்கு. அதுவும் நிய­மனம் பெற்று ஒரு மாதத்தின் பின்னர், வெறும் ஒரே ஒரு மாத சேவை நீடிப்பை மாத்­திரம் ஜனா­தி­பதி வழங்­கி­யி­ருப்­பது தான் ஆச்­ச­ரியம்.பல தள­ப­தி­க­ளுக்கு, ஆறு மாத, ஒரு வருட சேவை நீடிப்­பு­க­ளுக்குப் பின்னர், இரண்­டா­வது, சேவை நீடிப்பும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மூன்­றா­வது சேவை நீடிப்பைப் பெற்­ற­வர்­க ளும் உள்­ளனர்.

ஆனால், ஒரு மாத சேவை நீடிப்புப் பெற்­றுள்ள வைஸ் அட்­மிரல் ட்ராவிஸ் சின்­னை­யா­வுக்கு, மீண்டும் சேவை நீடிப்பு வழங்­கப்­ப­டுமா என்ற கேள்வி உள்­ளது. அவரை நீண்­ட­காலம் பத­வியில் வைத்­தி­ருக்க அர­சாங்கம் விரும்­பி­யி­ருந்தால், 6 மாதங்கள் அல்­லது 1 வருட சேவை நீடிப்பை வழங்­கி­யி­ருக்­கலாம்.

குறு­கிய சேவை நீடிப்பு வழங்­கப்­பட்­ட­தா­னது, நீண்­ட­கா­லத்­துக்கு பத­வியில் வைத்­தி­ருக்கும் திட்டம் இல்லை என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும். அல்­லது ஏதா­வது ஒரு முடி­வுக்கு இணங்­கு­மாறு அழுத்தம் கொடுப்­ப­தற்­கா­ன­தாக இருக்க வேண்டும்.

ஆயுதக் கப்­பல்­களை மூழ்­க­டிக்கும் நட­வ­டிக்­கை­ளுக்கு தலைமை தாங்­கிய- விடு­த லைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரில், நன்கு அனு­பவம் மிக்­க­வ­ரான வைஸ் அட்­மிரல் சின்­னையா, கடற்­ப­டையை நவீ­னப்­ப­டுத்தும் திட்­டங்­களில் முக்­கிய பங்கு வகித்­தவர். அவரைப் பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல் குறு­கிய காலத்­தி­லேயே வீட்­டுக்கு அனுப்பும் முயற்­சி­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கி­றதா என்ற கேள்­வி­களும் எழுந்­தி­ருக்­கின்­றன.

இவ­ருக்குக் கீழ் இருக்கும் மற்­றொரு கடற்­படை அதி­கா­ரிக்கு வாய்ப்­ப­ளிப்­ப­தற்­காக, இவரை ஓய்­வு­பெற வைக்க முயற்­சிகள் நடப்­ப­தா­கவும் ஒரு தகவல் ஊட­கங்­களில் பர­வி­யி­ருந்­தது.

அதே­வேளை, ரஷ்­யா­விடம் இருந்து ஜிபார்ட் 5.1 (Gephard 5.1) ரகத்தைச் சேர்ந்த ஆழ்­கடல் ரோந்துக் கப்­பலைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­ததால் தான், வைஸ் அட்­மிரல் சின்­னையா பழி­வாங்­கப்­ப­டு­கிறார் என்றும் ஒரு கதை பர­வி­யுள்­ளது.

கடந்த புதன்­கி­ழமை நடந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில், “24 பில்­லியன் ரூபா செலவில் போர்க்­கப்­பலைக் கொள்­வ­னவு செய்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்­ததால் தான் கடற்­ப­டைத்­த­ள­ப­தியை ஓய்­வு­பெற வைக்க முயற்­சிக்­கப்­ப­டு­கி­றதா?” என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்­ன­விடம் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்கு அவர், அப்­ப­டி­யில்லை, என்று சமா­ளித்­தி­ருந்தார். அதே­வேளை, ஒரு மாதத்தை விட அதிக சேவை நீடிப்பு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருக்க முடியும் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

எவ்­வா­றா­யினும், போர்க்­கப்பல் கொள்­வ­னவு விவ­காரம் அர­சியல் ரீதி­யா­கவும் வலுப்­பெற்று வரு­கி­றது.

துறை­மு­கத்தை விற்று போர்க் கப்பல் கொள்­வ­னவு செய்ய வேண்­டுமா? போர் இல்­லாத நாட்­டுக்கு எதற்­காக போர்க்­கப்பல் என்று மஹிந்த ஆத­ரவு கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.

நாடு பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்­கி­யி­ருக்­கின்ற போது, 24 பில்­லியன் ரூபா­வுக்கு போர்க்­கப்­பலை வாங்க வேண்­டிய தேவை இல்லை என்ற கருத்தில் நியாயம் உள்­ளது.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கமும், கூட இதையே தான் செய்­தி­ருந்­தது. அதனால் தான் போருக்குப் பின்­னரும், பாது­காப்புச் செலவு சற்றும் குறை­யாமல் எகிறிச் சென்று கொண்­டி­ருக்­கி­றது.

ரஷ்­யா­விடம் இருந்து போர்க்­கப்­பலை கடன் திட்­டத்தின் கீழ் தான் வாங்­கு­கிறோம் என்று அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்தக் கூடும். ஆனாலும், இந்த கட­னு­தவி சும்மா வழங்­கப்­ப­ட­வில்லை.

2010ஆம் ஆண்டு இலங்­கைக்கு 300 மில்­லியன் டொலர் கட­னு­தவித் திட்­டத்தை ரஷ்யா அறி­வித்­தி­ருந்­தது. அதில், 165 மில்­லியன் டொலர் மாத்­திரம் பயன்­ப­டுத்­தப்­பட்ட நிலையில், காலா­வ­தி­யாகி இருந்­தது.

காலா­வ­தி­யாகிப் போன கடன் திட்­டத்தைப் புதுப்­பித்தே, ரஷ்யா இந்தப் போர்க்­கப்­பலை இலங்கைக் கடற்­ப­டையின் தலையில் கட்­டி­விடப் போகி­றது.

மைத்­தி­ரி­பால சிறி­சேன ரஷ்­யா­வுக்குப் பயணம் மேற்­கொள்­வ­தற்கு முன்னர் இருந்தே, இது­பற்­றிய செய்­திகள் அவ்­வப்­போது ரஷ்ய ஊட­கங்­களில் வெளி­யா­கின. ஆனால் கடற்­ப­டையோ அதனை நிரா­க­ரித்து வந்­தது.

ரஷ்­யா­விடம் இருந்து ஜிபார்ட் 5.1 கப்­பலைக் கொள்­வ­னவு செய்­வ­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சமர்ப்­பித்த பின்­னரும் கூட, அத்­த­கைய முடிவு எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தான் கடற்­படை கூறி வந்­தது.

எனினும், கடந்த மாதம் 26ஆம் திகதி நடந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ரஷ்­யா­விடம் இருந்து ஜிபார்ட் 5.1 போர்க்­கப்­பலை வாங்­கு­வ­தற்கு அமைச்­ச­ரவை அனு­மதி அளித்­தி­ருக்­கி­றது.

இதற்­காக ரஷ்­யாவின் கடன் திட்­டத்­தி­லி­ருந்து, 135 மில்­லியன் டொலர் (சுமார் 20 பில்­லியன் ரூபா) பெறப்­படும். மிகுதி 15 வீதம் இலங்கை அரசின் பங்­க­ளிப்­பாக இருக்கும். ஆயு­தங்கள் மற்றும் கரு­விகள் பொருத்­தப்­பட்ட நிலையில் கப்­பலின் மொத்தப் பெறு­மதி, 158.5 மில்­லியன் டொல­ராகும். 24 பில்­லியன் ரூபா

இதை­விட கடற்­ப­டை­யி­ன­ருக்கு பயிற்சி அளிப்­ப­தற்கு 7 மில்­லியன் டொலரை (கிட்­டத்­தட்ட 1 பில்­லியன் ரூபா) அர­சாங்கம் வழங்க வேண்டும்.

ரஷ்யா வழங்கும் கடனை 4 வீத வட்­டி­யுடன் 10 ஆண்­டு­களில் இரண்டு தவ­ணை­களில் திருப்பிச் செலுத்த வேண்டும். இது தொடர்­பான உடன்­பாடு விரைவில் கையெ­ழுத்­தி­டப்­படும்.

இந்தப் போர்க்­கப்பல் தரை, வான் மற்றும் கட­லுக்­க­டி­யி­லான இலக்­கு­களைத் தாக்கும், பாது­காப்பு, ரோந்து மற்றும் ஈரூ­டகத் தாக்­கு­த­லுக்­கான சூட்­டா­த­ரவு, கண்­ணி­வெ­டி­களை விதைத்தல், கடல் எல்­லைகள், பொரு­ளா­தார வல­யங்­களை பாது­காத்தல், கடற்­படை நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஆத­ர­வ­ளித்தல், கடல் வளத்தைப் பாது­காத்தல், நிர்க்­க­தி­யான கப்­பல்­களை மீட்டல் போன்ற தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தும் வகையில் தயா­ரிக்­கப்­பட்­டது.

இதன் மூலம் தனி­யா­கவோ, கடல் நட­வ­டிக்கை படை­யா­கவோ பரந்­து­பட்ட பணி­களை மேற்­கொள்ள முடியும்.

AK-176M எனப்­படும், 76.2 மி.மீ ஆட்­டி­ல­றிகள், AK-630M எனப்­படும் ஆறு குழல்­களைக் கொண்ட 30 மி.மீ பீரங்கி, 14.5 மி.மீ கடற்­படை இயந்­திரத் துப்­பாக்­கிகள் இரண்டு என்­பன இதன் பிரதான ஆயுதங்களாகும்.

போர் இல்லாத போதிலும் கூட, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிடம் இருந்தும் அமெரிக்காவிடம் இருந்தும் கப்பல்களை வாங்கி கடற்படையைப் பலப்படுத்தி வருகிறது அரசாங்கம்.

இதுவரையில் அரசாங்கம் கொள்வனவு செய்த கப்பல்கள் எல்லாவற்றையும் விட ரஷ்யாவிடம் வாங்கவுள்ள ஜிபார்ட் 5.1 போர்க்கப்பல் தான் மிகவும் நவீனகரமானதும் சக்திவாய்ந்ததுமாகும்.

இலங்கையைப் போன்றதொரு நாட்டுக்கு இதுபோன்ற கப்பல்கள் தேவையா என்பது முக்கியமான கேள்வி. அதனால் தான் கடற்படைக்குள் கூட இந்தக் கொள்வனவு விடயத்தில் மாற்றுக் கருத்துக்கள் இருந்திருக்கலாம்.

அத்தகைய மாற்றுக் கருத்துக்கள் தான், கடற்படைத் தளபதியையும் ஓய்வு நிலைக்குள் தள்ளும் நிலையை ஏற்படுத்துமாக இருந்தால்,அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சைகள் உருவாக இடமுண்டு.

– சுபத்ரா –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*