NPC-Member-Rifkhan-Bathiudeen-Resigned

ரிஷாட்டின் சகோதரர் பதவி துறந்தார்!

வட­மா­காண சபையின் உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் உறுப்­பி­ன­ரான ரிப்கான் பதி­யுதீன் நேற்று இரா­ஜி­னாமாச் செய்­துள்ளார். வட­மா­காண சபையின் 107ஆவது அமர்வு நேற்று கைத­டி­யி­லுள்ள பேரவைச் செய­ல­கத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவ­ஞானம் தலை­மையில் நடை­பெற்­ற­போதே அவைத் தலை­வரின் அனு­ம­தி­யுடன் தனது பதவி வில­க­லுக்­கான கார­ணத்தை சபைக்கு அறி­வித்­த­துடன் அதற்­கான கடி­தத்­தினை அவைத் தலை­வ­ரிடம் சமர்ப்­பித்தார்.

தனது இரா­ஜி­னா­மா­விற்­கான காரணம் தொடர்­பாக மாகாண சபையில் உரை­யாற்­று­கையில், கடந்த மாகாண சபை தேர்­தலில் எமது கட்­சிக்கு ஒரு சில வாக்­குகள் குறை­வாக கிடைத்­த­தனால் இன்­னு­மொரு பிர­தி­நிதி வெற்றி பெற வேண்­டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு அடுத்­த­தாக வந்த எமது கட்­சியின் மூத்த உறுப்­பினர் அலிகான் ஷரீப் வெற்றி பெறாத கவலை எமது கட்­சியின் தலை­வ­ருக்கு இருந்­தது. எனவே அந்த கவ­லையை நிவர்த்தி செய்­வ­தற்­கா­கவும் அர­சி­ய­லிலே நாங்கள் ஒரு முன்­மா­தி­ரியைக் காட்­டு­வ­தற்­கா­கவும் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட நான் எனது உறுப்­பினர் பத­வியை ராஜி­னாமாச் செய்­கின்றேன்.

வட­மா­காண சபையின் உறுப்­பி­ன­ராக என்னைத் தெரிவு செய்த மன்னார் மாவட்ட வாக்­காளப் பெரு­மக்­க­ளுக்கு முதலில் மன­மார்ந்த நன்­றி­களை தெரி­விக்­கின்றேன்.

அதே போன்று என் மீது நம்­பிக்கை கொண்டு தேர்­தலில் என்னை வேட்­பா­ள­ராக நிறுத்­திய எனது கட்­சி­யான அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாத் பதி­யு­தீ­னுக்கும், அவர் தலைமை தாங்கும் கட்­சிக்கும் நன்­றி­களை தெரி­விக்­கின்றேன்.

கடந்த மாகாண சபை தேர்­தலில் மன்னார் மாவட்­டத்தில் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு மக்கள் அளித்த வாக்­கு­களை விட எனக்­க­ளித்த வாக்­குகள் விகி­தா­சா­ரத்தில் அதி­க­மா­னது. எனவே அந்த வாய்ப்பை ஏற்­ப­டுத்தித் தந்த அனைத்து வாக்­கா­ளர்­க­ளுக்கும் நான் மீண்டும் நன்­றி­களைக் கூறு­கின்றேன்.

இந்த சபை­யிலே நான் எதிர்க்­கட்சி உறுப்­பி­ன­ராக இருந்த போதும் வட மாகாண சபை மேற்கொண்ட மக்கள் நலன் சார்ந்த அத்தனை விடயங்களுக்கும் எனது பூரண ஒத்துழைப்பை நல்கி இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.

ரிப்கான் பதி­யுதீன் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*