kalam

காலம் கடத்தும் யுக்தி (சமகாலப் பார்வை)

நிலை­யான அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்தும் முயற்­சி­களை வேக­மாகச் செய்ய முடி­யாது, இந்த முயற்­சிகள் மெது­வாக- அதே­வேளை உறு­தி­யாக முன்­னெ­டுக்­கப்­படும் என்று ஐ.நா. பொதுச்­ச­பையின் 72 ஆவது கூட்­டத்­தொ­டரில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை உரை­யாற்­றிய போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருந்தார்.

கிட்­டத்­தட்ட இதே கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, சில வாரங்­க­ளுக்கு முன்னர், ஊடக ஆசி­ரி­யர்­க­ளு­ட­னான சந்­திப்பின் போதும் கூறி­யி­ருந்தார். “இலங்­கைக்கே உரிய பாணியில் பொறுப்­புக்­கூறல் கடப்­பா­டுகள் நிறை­வேற்­றப்­படும், மெது­வா­கவே அது நடக்கும், விரை­வாக இடம்­பெ­றாது” என்று அவர் அப்­போது திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்­தி­ருந்தார்.

நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கும், நல்­லி­ணக்­கத்­துக்கும் தேவை­யான நட­வ­டிக்­கை­களை, இலங்கை அர­சாங்கம் வேக­மாக முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்­டு­களை அவ­ரது இந்தக் கருத்­துகள் ஒப்­புக்­கொள்ளும் வகையில் அமைந்­தி­ருக்­கின்­றன. நல்­லி­ணக்க முயற்­சி­களில் குறிப்­பாக நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் இன்­னமும் எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை.

2015ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்கை அர­சாங்கம் இது­தொ­டர்­பான வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்­தது, மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம், அந்த வாக்­கு­று­தி­களை உறு­திப்­ப­டுத்­தியும் இருந்­தது.

ஆனாலும், அர­சாங்கம் நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்­கு­வதில் எந்தக் கரி­ச­னை­யையும் செலுத்­த­வில்லை. இதனால், தான், அர­சாங்கம் வேண்­டு­மென்றே இழுத்­த­டித்து, கால­தா­மதம் செய்­கி­றதோ என்ற சந்­தே­கங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன.

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்கள், இந்தக் கால இழுத்­த­டிப்பை கடு­மை­யான சந்­தே­கங்­க­ளு­ட­னேயே பார்க்­கின்­றனர். ஏனென்றால், போர் முடிந்து, எட்டு ஆண்­டு­க­ளுக்கு மேலா­கியும் அவர்­க­ளுக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. நீதி கிட்­ட­வில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்­தி­ருக்­கின்­றனர்.

அத்­துடன், தமி­ழர்­க­ளுக்கு தீர்­வு­களை வழங்­கு­வ­தாக, இலங்­கையில் காலம் கால­மாக பத­விக்கு வந்த ஒவ்­வொரு அர­ சாங்­கமும் ஏமாற்றி வந்­ததால் தமிழ் மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யீ­னமும் உள்­ளது.

இதனால் தான், அர­சாங்கம் வேண்­டு­மென்றே காலத்தை இழுத்­த­டிக்­கி­றதா என்ற சந்­தே­கங்­களை தமிழ் மக்கள் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது. இது தமிழ் மக்­க­ளுக்கு மாத்­திரம் வந்­தி­ருக்­கின்ற சந்­தேகம் அல்ல. சர்­வ­தேச மட்­டத்தில் கூட இந்த சந்­தே­கமும், நம்­பிக்­கை­யீ­னமும் தோன்­றி­யி­ருக்­கி­றது.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் ராட் அல் ஹுசேனின் ஆகப் பிந்­திய அறிக்கை அதற்கு ஒர் உதா­ரணம். ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 36 ஆவது கூட்­டத்­தொ­டரின் தொடக்க நாளன்று நிகழ்த்­திய உரையில் அவர், “பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான நிலை­மா­று­கால பொறி­மு­றை­களை உரு­வாக்க இலங்கை அர­சாங்கம் தவ­றி­யுள்ள நிலையில், உல­க­ளா­விய நீதித்­துறை நடை­மு­றைகள் அவ­சி­ய­மா­கி­யுள்­ளது” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஜெனீ­வாவில் கொடுத்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாமல் இழுத்­த­டிக்க அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது என்ற சந்­தேகம், இலங்­கைக்கு இரண்டு வருட கால­அ­வ­காசம் கொடுக்­கப்­பட்ட ஆறு மாதங்­க­ளுக்­குள்­ளா­கவே ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு வந்து விட்­டது.

ஆனால், 2015ஆம் ஆண்டு காலக்­கெடு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­றாமல் இழுத்­த­டிக்க முனை­கி­றது போலுள்­ளது என்று, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதமே, அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்தில் போர்க்­குற்ற விவ­கா­ரங்­களைக் கையாளும், பூகோள குற்­ற­வியல் பணி­ய­கத்தின் தூது­வ­ராக இருந்த ஸ்டீபன் ராப் கணித்­தி­ருந்தார்.

அவ­ரது அந்தக் கணிப்பு சரி­யா­னது என்­ப­தையே, ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் அண்­மைய குற்­றச்­சாட்டு உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. எவ்­வா­றா­யினும், சர்­வ­தேச மட்­டத்தில் தமக்கு அதி­ருப்­திகள், அவ­நம்­பிக்­கைகள் ஏற்­ப­டு­கின்­றன என்­பதை இலங்கை அர­சாங்கம் பெரி­தாக எடுத்துக் கொள்­வ­தா­கவே தெரி­ய­வில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் விரைந்து செயற்­ப­டு­மாறும், கால­வ­ரம்பை நிர்­ண­யித்து வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் கோரி­யி­ருந்தார்.

ஆனால், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவோ, ஐ.நா. பொதுச்­சபைக் கூட்­டத்­தொ­டரில் கூட, வேக­மாகச் செய்ய முடி­யாது, மெது­வாகத் தான் காரி­யங்கள் நடக்கும் என்று கூறி­யி­ருக்­கிறார். ஜெனீ­வாவில் கால­அ­வ­கா­சங்­களைப் பெறும் போது, மெது­வா­கவே நிறை­வேற்ற முடியும் என்று, அர­சாங்கம் ஒரு­போதும் கூறி­ய­தில்லை. சர்­வ­தேச சமூ­கத்தின் காலக்­கெ­டுவுக்குள் நிறை­வேற்­று­வ­தா­கவே வாக்­கு­றுதி அளித்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால், அண்­மையில் வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன வெளி­யிட்­டி­ருந்த கருத்து, ஜெனீ­வாவில் கொடுக்­கப்­பட்ட வாக்­கு­று­திகள் விட­யத்தில் அர­சாங்கம் எந்த கால­வ­ரம்­பையும் நிர்­ண­யித்துச் செயற்­படப் போவ­தில்லை என்­ப­தையே உணர்த்­தி­யி­ருந்­தது.

இரண்டு ஆண்­டு­க­ளுக்குள் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முடி­யாமல் போனாலும் கூட, மேல­திக கால­அ­வ­கா­சத்தைப் பெற்றுக் கொள்வோம் என்று அவர் மிக அலட்­சி­ய­மாகக் கூறி­யி­ருந்தார்.

இதன்­மூலம், அர­சாங்கம் இந்தக் கால­அ­வ­கா­சங்­களை முன்­வைத்துச் செயற்­ப­ட­வில்லை என்­பது உறு­தி­யா­கி­யி­ருக்­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னது கருத்­துக்­களும் அதனைத் தான் வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

அர­சாங்கம் தனக்­கான உள்­ளக அழுத்­தங்­களில் இருந்து தப்­பிக்­கவே, இந்த உத்­தியைக் கையாள்­கி­றது. அதனைக் காரணம் காட்­டியே பொறுப்­பு­களில் இருந்து தட்­டிக்­க­ழிக்­கவும் பார்க்­கி­றது.

அண்­மையில் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் இதனை ஒரு பேட்­டியில் குறிப்­பிட்­டி­ருந்தார். “எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­றுதி அளிப்­பார்கள். ஆனால், அந்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­டாது. அடுத்­த­முறை சந்­தித்துப் பேசும் போது அது­பற்றிக் கேட்டால் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வந்து விடுவார் என்று கூறி தப்­பிக்க முனை­கி­றார்கள்” என்று அவர் கூறி­யி­ருந்தார்.

அதா­வது பொறுப்­பு­களில் இருந்தும் வாக்­கு­று­தி­களில் இருந்தும் நழுவிக் கொள்­வது இந்த அர­சாங்­கத்தின் வழக்­க­மாக மாறி­யி­ருக்­கி­றது. அதற்கு மஹிந்த ராஜபக் ஷ என்ற கார­ணியை அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொள்­கி­றது என்­பது வெளிப்­படை.

அதே­வேளை, மெது­வா­கவே நல்­லி­ணக்கச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்ற ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்தை சர்­வ­தேச சமூகம் எந்­த­ள­வுக்கு ஏற்றுக் கொள்ளும் என்று தெரி­ய­வில்லை. ஆனால், பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான தமிழ் மக்­க­ளுக்கு இந்த மெது­வான நகர்­வுகள் அதி­ருப்­தி­யையும், நம்­பிக்­கை­யீ­னத்­தை­யுமே ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் நம்­பிக்­கையைப் பெறாமல் ஒரு­போதும் நல்­லி­ணக்க முயற்­சிகள் வெற்றி பெறாது என்­பது, சர்­வ­தேச தரப்­பி­னரால் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. ஆனாலும், அர­சாங்கம் அதை­யிட்டு ஒரு­போதும் கவலை கொண்­ட­தா­கவே தெரி­ய­வில்லை.

அண்­மையில் ஐ.நா. அதி­கா­ரிகள், நிபு­ணர்கள் வெளி­யி­டு­கின்ற கருத்­துக்கள், அறிக்­கை­களில் நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக அதி­க­ளவில் கூறப்­ப­டு­வதை காணலாம். நம்­பிக்­கையைக் கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாத நிலை­மா­று­கால நீதிப் பொறி­மு­றைகள் பய­னற்­றவை.

தமிழ் மக்கள் முற்­றாக நம்­பிக்­கை­யி­ழந்து போய் விட்ட நிலையில், மெது­வாக நகர்ந்து, நிலை­மாறு கால நீதிப் பொறி­மு­றை­களை உரு­வாக்க முனைந்­தாலும் கூட அது காலம் கடந்ததாக மாறிவிடும். அதனை விட, அரசாங்கம் மெல்லநடை போடுவதற்கு காலமும் காத்திருக்காது.

இந்த அரசாங்கத்தின் பதவிக்காலம் தேய்ந்து கொண்டிருக்கிறது. அதற்குள் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம். ஆனால் அரசாங்கத்தின் இப்போதைய அணுகுமுறையின் கீழ் மெல்லநடை போட்டால் ஒருபோதும், இந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்துக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது.

வாக்குறுதிகளை நிறைவேற்ற முற்பட்டால் தமக்கு அடுத்த தேர்தலில் வாய்ப்புக் கிட்டாமல் போய் விடும் என்ற அச்சம் அரசாங்கத்துக்கு வந்து விட்டால் அதிலிருந்து நழுவிக் கொள்ளவே முனைவார்கள்.

அந்த தேர்தல் நடுக்கம் வருவதற்கிடையில் அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றினால் சரி, இல்லையேல், மீண்டும் அடுத்த அரசாங்கத்தை நோக்கி, பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை வலியுறுத்தும் நிலைக்குத் தான் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, சர்வதேச சமூகமும் தள்ளப்படும்.

சத்ரியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*