ranjith d

நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளப் போகிறது அரசாங்கம்?!

ஒவ்­வொரு அமைச்­சர்கள் மீதும் தனித்­த­னி­யாக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­களை சமர்ப்­பிப்­ப­தற்குப் பதி­லாக ஒட்டுமொத்த அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை ஒன்றை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்க ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி தயா­ராகி வரு­வ­தாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் இரத்­தி­ன­புரி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் டிசொய்சா தெரிவித்துள்ளார்.

இந்த நல்­லாட்சி அர­சாங்கம் மகா­நா­யக்­கர்­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் எதி­ரா­கவே செயற்­பட்டு வரு­கின்­றது. ஆகவே, ஒவ்­வொரு அமைச்­சர்­க­ளுக்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­களை கொண்­டு­வ­ரு­வ­தற்குப் பதி­லாக ஒட்­டு­மொத்த அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை கொண்டு வரப்­படும். அத்­துடன், அர­சாங்­கத்தில் இருக்கும் அமைச்­சரும் முன்னாள் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யு­மான சரத் பொன்­சேகா சொற்ப வாக்­கு­களைப் பெற்ற மக்கள் ஆத­ர­வற்ற ஒருவர். அவர் தற்­போது இரா­ணுவ இர­க­சியம் பற்றி பேசிக்­கொண்­டி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கருத்­துமே அவ­ரது குர­லாக ஒலிக்­கின்­றது. அத்­துடன் இந்த அர­சாங்கம் செல்­கின்ற போக்கும் சரி­யில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரப்­போ­வ­தாக அண்­மைய தினங்­களில் தொடர்ச்­சி­யாகக் கூறி வருகின்றனர். இந்த புதிய அரசியலமைப்பு என்பது மக்களுக்காக கொண்டுவரப்பட்டதல்ல. இதன் பின்னணியில் முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கல்களே உள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*