satha - vetha

சாதனையும் வேதனையும் (சமகாலப் பார்வை)

நல்­லாட்சி அர­சாங்கம் தனது பெய­ருக்கு ஏற்ற வகையில் நல்­லாட்­சியைப் புரி­கின்­றதா இல்­லையா என்­பது ஒரு புற­மி­ருக்க, அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா செய்­வ­திலும், நம்பிக்கையில்லாப் பிரே­ரணை கொண்­டு­வ­ரு­வ­திலும், அது சாத­னைகள் புரிந்­தி­ருப்­ப­தா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

ஆனால் இந்த சாத­னைகள் மக்­க­ளு­டைய எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­று­வ­தற்கும், அவர்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கும் வழி­வ­குப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் இடம்­பெற்ற ஊழல்­களில் சம்­பந்­தப்­பட்டார் என அர­சாங்கத் தரப்­பி­ன­ரா­லேயே முன்­வைக்­கப்­பட்ட அழுத்தம் கார­ண­மாக வெளி­வி­வ­கார அமைச்­சசர் ரவி கரு­ணா­நா­யக்க தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தார்.

தன் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளை­ய­டுத்து, இவ்­வாறு அவர் இரா­ஜி­னாமா செய்­தி­ருப்­பது, ஒரு முன்­மா­தி­ரி­யான நட­வ­டிக்­கை­யா­கவே பேசப்­ப­டு­கின்­றது. இவ­ருக்கு முன்­ன­தாக சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ராக இருந்த திலக் மாரப்­பன 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார்.

கடந்த அர­சாங்­கத்தில் பெரும் ஊழல் நட­வ­டிக்கை இடம்­பெற்­ற­தாகப் பெரிய அளவில் பேசப்­பட்டு வரு­கின்ற எவன்கார்ட் (மிதக்கும் ஆயுதக் கப்பல்) விவ­கா­ரத்தில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்தார் என்ற குற்­றச்­சாட்டு சக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே அவர் அப்­போது அமைச்சர் பத­வியை துறந்­தி­ருந்தார்.

நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்சியை பொறுப்­பேற்­ற­தை­ய­டுத்து, 2015 ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் அவர், சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தார். அந்த அமைச்சு பொறுப்பை ஏற்ற மூன்­றா­வது மாதத்­தி­லேயே அதனை இரா­ஜி­னாமா செய்ய வேண்­டிய நிலைமை அவ­ருக்கு ஏற்­பட்­டி­ருந்­தது.

அந்த வகையில் அமைச்சர் திலக் மாரப்­ப­ன­வுக்கு அடுத்­த­தாக நல்­லாட்சி அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க, அமைச்சர் மாரப்­ப­ன­வுக்கு எதி­ராக எழுந்­தி­ருந்­தது போன்ற அழுத்­தங்கள் ஏற்­பட்­டதன் கார­ண­மாக பத­வியைத் துறந்­துள்ளார்.

இரண்­டா­வது சாதனை

அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் இரா­ஜி­னா­மா­வா­னது, இலங்­கையின் அர­சி­யலில் முன்­மா­தி­ரி­யான ஒரு நட­வ­டிக்கை என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வர்­ணித்­தி­ருந்­தமை கவ­னத்­திற்­கு­ரி­யது.

அதே­வேளை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களின் வற்­பு­றுத்­த­லை­ய­டுத்தே அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இரா­ஜி­னாமா செய்­தி­ருந்தார் என்­பதும் முக்­கிய தக­வ­லாகும்.

மத்­திய வங்­கியின் ஊழல் விவ­கா­ரத்தில் அவர் சம்­பந்­தப்­பட்­டி­ருந்தார் என்­ப­தற்­காக ஜனா­தி­பதி விசா­ர­ணை ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைக்கு அவர் முகம் கொடுத்­தி­ருந்தார். அத­னை­ய­டுத்து, அவ­ரு­டைய நட­வ­டிக்­கைகள் குறித்து அரச தரப்பைச் சேர்ந்­த­வர்­களும் சிவில் சமூ­கத்­தி­னரும் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருந்­த­துடன், அவரைப் பதவி வில­கு­மாறு அழுத்தம் கொடுத்­தி­ருந்­தார்கள்.

ரவி கரு­ண­நா­யக்­கவின் இரா­ஜி­னாமா செயற்­பாடு, இலங்கை அர­சி­யலில் முன்­மா­தி­ரி­யா­ன­தொரு நட­வ­டிக்கை என்று பேசப்­பட்ட போதிலும், அவ­ருக்கு முன்­ன­தாக இதே அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்த திலக் மாரப்­ப­னவின் இரா­ஜி­னாமா விடயம் இவ்­வாறு சிலா­கித்து பேசப்­ப­ட­வில்லை. அதற்­கான காரணம் என்ன என்­பது தெரி­ய­வில்லை.

அதே­நே­ரத்தில் இந்த விட­யத்தில் மற்­று­மொரு சாத­னையும் நிகழ்த்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. இதே அர­சாங்­கத்தில் அமைச்­ச­ராக இருந்து தனது பொறுப்பைத் துறந்­தி­ருந்த திலக் மாரப்­பன மீண்டும் அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பதே அந்த இரண்­டா­வது சாத­னை­யாகும்.

இரா­ஜி­னாமா செய்­துள்ள அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஏற்­றி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் பொறுப்பே திலக் மாரப்­ப­ன­வுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ­ருக்கு 2015 ஆம் ஆண்டு வழங்­கப்­பட்­டி­ருந்த சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சுப் பொறுப்பை துறந்­ததன் பின்னர் 21 மாதங்­களில் மீண்டும் அவ­ருக்கு, இவ்­வாறு முக்­கிய அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அமைச்­ச­ர­வையில் 2017 மே மாதம் செய்­யப்­பட்ட மாற்­றத்­தின்­போது, 9 பேருக்கு அமைச்சுப் பத­வி­களும், இரா­ஜாங்க அமைச்சுப் பத­வி­யொன்றும் வழங்­கப்­பட்­டது. அப்­போது திலக் மாரப்­ப­ன­வுக்கு அபி­வி­ருத்திப் பணிகள் அமைச்சுப் பொறுப்பு வழங்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து அவர் இப்­போது முக்­கி­யத்­துவம் மிக்க வெளி­வி­வ­கார அமைச்­ச­ரா­கவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

தேர்தல் கால வாக்­கு­று­திகள்

ஆட்­சியைக் கைப்­பற்­று­வ­தற்­காக, ஊழல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுத்து, ஊழ­லற்ற நல்­லாட்சி புரிவோம். ஜன­நா­ய­கத்­திற்குப் புத்­து­யி­ர­ளித்து தழைக்கச் செய்வோம். நிறை­வேற்று அதி­காரம் கொண்­டுள்ள ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்றம் செய்து, பாரா­ளு­மன்­றத்­திற்கும், பிர­த­ம­ருக்கும் அதி­கா­ரங்­களை உரித்­தாக்­குவோம். தேர்தல் முறையை மாற்­றி­ய­மைப்போம். தேசிய சிறு­பான்மை இன மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்போம். இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்போம். பொரு­ளா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்பி நாட்டை சுபீட்­ச­ம­டையச் செய்வோம் என்­ற­வா­றாக தேர்­தலில் பல வாக்­கு­று­தி­களை முன்­வைத்து, நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

ஜனா­தி­ப­திக்கு வழங்­கப்­பட்­டுள்ள நிறை­வேற்று அதி­கா­ரங்­களை அள­வற்ற வகையில் அதி­க­ரித்து, அந்தப் பத­வியில் வாழ்நாள் முழுதும் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­ப­தற்­கான முயற்­சியில் ஈடு­பட்ட முன்னாள் ஜனா­தி­ப­தியை அதி­கா­ரத்தில் இருந்து நீக்­கு­வ­தற்­காக ஜன­நா­ய­கத்தின் மீது பற்­று­க்கொண்ட பலர் மேற்­கொண்ட முயற்­சியின் பய­னா­கவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டது. இந்த ஆட்சி மாற்­றத்தை கத்­தி­யின்றி சத்­த­மின்றி செய்­யப்­பட்­டதோர் அர­சியல் புரட்­சி­யா­கவே பலரும் நோக்­கி­னார்கள்.

கீரியும் பாம்பும் போல எதிரும் புதி­ரு­மான அர­சியல் செயற்­பா­டு­களைக் கொண்­டி­ருந்த சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், ஐக்­கிய தேசிய கட்­சியும் இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் முதற் தட­வை­யாக இணைந்து உரு­வாக்­கி­யதே நல்­லாட்சி அர­சாங்­க­மாகும்.

ஊழல் புரிந்­த­வர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என உறு­தி­ய­ளித்­தி­ருந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லேயே, ஊழல் குற்­றச்­சாட்­டுக்கள் கார­ண­மாக, இரண்டு அமைச்­சர்கள் தமது பத­வி­களைத் துறந்­தி­ருக்­கின்­றனர்.

அது மட்­டு­மல்­லாமல், நீதி மற்றும் புத்­த­சா­சன அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக் ஷ பதவி விலக வேண்டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்தார். அம்பாந்­தோட்டை துறை­முக ஒப்­பந்த விட­யத்தில் அமைச்­ச­ர­வையின் கூட்­டுப்­பொ­றுப்பை மீறிச் செயற்­பட்டார் என்­ப­துடன், முன்­னைய ஆட்­சி­யா­ளர்கள் மீதான ஊழல் மற்றும் மோச­டிகள் தொடர்­பான விட­யங்­களில் ஆத­ர­வ­ளிக்கும் வகை­யி­லான போக்கைக் கடைப்­பி­டித்­தி­ருந்தார் என்றும், அதனால் அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்யும் விட­யங்­களில் உரிய முறையில் கவனம் செலுத்­த­வில்லை என்றும் அவர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

ஆயினும் அமைச்­சர்­க­ளான திலக் மாரப்­பன மற்றும் ரவி கரு­ணா­நா­யக்க போன்று விஜே­தாஸ ராஜ­பக் ஷ தனது பத­வியைத் துறப்­ப­தற்குத் தயா­ராக இருக்­க­வில்லை. அவர் மீது சாட்­டப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு அவர் கூறிய கார­ணங்­களும் ஏற்­பு­டை­ய­ன­வாக இருக்­க­வு­மில்லை. இதனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் கோரிக்­கைக்கு அமை­வாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வேண்­டு­கோ­ளின்­படி அவரை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வியில் இருந்து தூக்கி எறிந்­துள்ளார்.

முக்­கிய அமைச்சர் ஒருவர் ஜனா­தி­ப­தி­யினால் பதவி நீக்கம் செய்­யப்­பட்ட சம்­ப­வமும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­லேயே இடம்­பெற்­றி­ருக்­கின்­றது. இதனை இந்த அர­சாங்­கத்தின் மற்­று­மொரு சாத­னை­யாகக் கொள்­வதில் தவ­றி­ருக்க முடி­யாது.

அடுத்­த­தாக அமைச்­ச­ர­வையின் இணைப் பேச்­சா­ளரும், சுகா­தா­ரத்­துறை அமைச்­ச­ரு­மா­கிய ராஜித சேனா­ரத்­ன­வுக்கு எதி­ராக சபா­நா­ய­க­ரிடம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. பொது எதி­ர­ணியைச் சேர்ந்த 39 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இந்தப் பிரே­ர­ணையில் கையெ­ழுத்­திட்­டி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு அடுத்­த­டுத்து அமைச்­சர்கள் வில­கு­வ­தற்கும், விலக்­கப்­ப­டு­வ­தற்கும் மட்­டு­மல்­லாமல் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு முகம் கொடுப்­ப­தற்­கு­மான துர்ப்­பாக்­கிய நிலை­மைக்கு நல்­லாட்சி அர­சாங்கம் முகம் கொடுத்­தி­ருக்­கின்­றது. இவை­யெல்­லாமே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் ‘சாத­னை­க­ளா­கவே’ நோக்­கப்­ப­டு­கின்­றன.

அர­சாங்­கத்தின் இந்த ‘சாத­னைகள்’ எதுவும், நல்­லாட்சி இடம்­பெற வேண்டும் எனவும், பொது நலன்­க­ளுக்­காகச் செயற்­பட வேண்டும் எனவும் விரும்­புகின்ற மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற வல்­ல­வை­யாக இல்­லை­யென்­பது வருத்­தத்­திற்­கு­ரி­யது.

கேள்­விகள்

முன்­னைய அர­சாங்­கத்தில் வரை­ய­றை­யற்ற வகையில் வகை­தொ­கை­யற்ற விதத்தில் இடம்­பெற்ற ஊழல்கள் தொடர்­பாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக, ஊழல்­களை ஒழிக்கப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்­துள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அதற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பொது­வா­ன­தொரு குற்­றச்­சாட்­டாகும்.

ஊழல்கள் பற்­றிய விசா­ர­ணை­களில் அதிர்ச்­சி­ய­ளிக்கும் வகையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மில்­லி­யன்கள் ரூபா பண மோச­டிகள் சம்­பந்­த­மான தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால் அவற்றில் சம்­பந்­தப்­பட்ட எவ­ருமே சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வு­மில்லை. எவ­ருமே நீதி­மன்­றத்தின் ஊடாகத் தண்­டிக்­கப்­ப­ட­வு­மில்லை. அதற்கும் அப்பால், நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் ஊழல்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்டும் பர­வ­லாக எழுந்­தி­ருக்­கின்­றன.

ஆனால், முன்னர் ஊழல் செய்­த­வர்கள் கண்­டு­கொள்­ளப்­ப­டா­ததைப் போலவே இப்­போதும் ஊழல்­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களைக் கண்­டு­கொள்­ளாத போக்கில் அர­சாங்கம் சென்று கொண்­டி­ருக்­கின்­றது என நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உயி­ரச்சு­றுத்­தல்­க­ளுக்கு மத்­தியில் முன்­னின்று செயற்­பட்­ட­வர்கள் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள். ஆத்­தி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றார்கள். இதன் வெளிப்­பா­டா­கவே, விகா­ர­மா­தேவி பூங்­காவில் அர­சாங்கம் பொறுப்­புள்ள வகையில் செயற்­ப­ட­வில்லை என இடித்­து­ரைப்­ப­தற்­கான சத்­தி­யாக்­கி­ரகம் ஒன்று மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

பொது­வாக ஒருவர் ஊழல் செய்தார் என்று குற்றம் சுமத்­தப்­பட்டால், அந்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ர­ணைகள் நடத்தி உண்மை கண்­ட­றி­யப்­பட வேண்டும். அப்­போ­துதான் உண்­மை­யி­லேயே அவர் குற்றம் புரிந்­தி­ருக்கின்றாரா? இல்­லையா என்­பது தெளி­வாகும். அவ்­வா­றாக ஒரு விசா­ர­ணையின் மூலம் குற்றம் செய்­யப்­பட்­டது அல்­லது குற்றம் இழைக்­கப்­ப­ட­வில்லை என்­பது கண்­ட­றி­யப்­ப­டா­ம­லேயே பத­வியைத் துறந்த ஒரு­வ­ருக்கு மீண்டும் அதே அந்­தஸ்தில் பதவி வழங்­கப்­பட்­டி­ருக்கின்றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இது நியா­ய­மான செயற்­பா­டா­குமா என்ற கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வாறு பதவி வழங்­கப்­பட்டால் மீண்டும் அந்த அந்­தஸ்தில் ஊழல் நடை­பெற மாட்­டாது என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் என்ற வினாவும் எழுந்­தி­ருக்­கின்­றது.

அமைச்சர் திலக் மாரப்­ப­னவைப் போலவே, இப்­போது அமைச்சு பத­வியை இரா­ஜினாமா செய்­துள்ள ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கும், இன்னும் சில மாதங்­களில் மீண்டும் அமைச்சுப் பதவி வழங்­கப்­பட்டு விடும். எனவே, அமைச்­சர்கள் ஊழல் புரிந்­தார்கள் என்­பதும், அத­னை­ய­டுத்து அவர்கள் இரா­ஜி­னாமா செய்­தார்கள் என்­பதும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இடம்­பெ­று­கின்ற வெறும் கேலிக் கூத்­தான அர­சியல் நாட­கங்­களே என்று நாட்டின் தென்­ப­குதி அர­சியல் வட்­டா­ரங்­களில் அர­சாங்­கத்தைக் குத்­திக்­காட்டும் வகையில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­கின்­றன.

இரு முனை­க­ளிலும் அதி­ருப்தி

எதேச்­சா­தி­காரப் போக்­கிற்கு எதி­ராகக் கிளர்ந்­தெ­ழுந்த பொது அமைப்­புக்­களும், அவற்றின் பின்னால் அணி­சேர்ந்த பொது­மக்­களும் இணைந்து உரு­வாக்­கிய புதிய அர­சாங்கம் தனது தேர்­தல்­கால வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றும். தேசிய ரீதி­யி­லான நாட்டின் இரண்டு பெரிய அர­சியல் கட்­சி­களும் இணைந்­துள்ள புதிய அர­சாங்­க­மா­னது, தனது பெய­ருக்கு ஏற்ற வகையில் நல்­லாட்சி புரியும். நாட்டின் பொரு­ளா­தாரம் வளம் பெறும். யுத்தம் கார­ண­மாக கட்­டுக்­க­டங்­காமல் எகி­றிய வாழ்க்கைச் செலவு குறை­வ­டையும். நாட்டில் வேலை­வாய்ப்­புக்கள் அதி­க­ரிக்கும். இனங்­க­ளுக்­கி­டையில் நில­விய கசப்­பு­ணர்வும், சந்­தே­கத்­துடன் கூடிய பகை­யு­ணர்ச்­சியும் மறைந்து ஐக்­கி­யமும், நல்­லு­றவும் நிலை­நாட்­டப்­படும் என்­றெல்லாம் நாட்டின் தென்­ப­கு­தி­களில் மக்கள் எதிர்­பார்த்­தார்கள். ஆனால் அந்த எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வே­ற­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் யுத்த பீதியும், எதிர்­காலம் பற்­றிய நம்­பிக்­கை­யின்­மையும் அகன்று, நாளாந்த வாழ்க்­கையில் சில முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­ற­போ­திலும், மக்கள் மத்­தியில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது அர­சியல் ரீதி­யான நம்­பிக்கை மேலோங்­க­வில்லை. அதற்­கு­ரிய வகையில் அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் அமை­ய­வில்லை.

மறுபக்­கத்தில், தேசிய சிறு­பான்மை

இன­மக்­க­ளா­கிய தமி­ழர்கள் மற்றும் முஸ்­லிம்கள் மத்­தியில் நல்­லாட்­சி­யி­லும்­கூட தாங்கள் அடக்­கி­யொ­டுக்­கப்­ப­டு­வ­தான உணர்வே தலை­தூக்­கி­யி­ருக்­கின்­றது.

மத ரீதி­யா­கவும் மொழி ரீதி­யா­கவும், இன ரீதி­யா­கவும் சிறு­பான்மை இன மக்கள் மீதான நெருக்­கு­தல்கள் தொடர்­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது.

யுத்­தத்தின் பின்னர், நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டி, இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்கி, நாட்டில் ஐக்­கி­யத்­தையும் நல்­லு­ற­வையும் உரு­வாக்­கு­வதில், யுத்­தத்தில் வெற்­றி­ய­டைந்த முன்­னைய அர­சாங்கம் தவ­றி­விட்­டது.

அந்த அர­சாங்கம் விட்ட தவ­று­களைப் போக்கும் வகையில் அதி­கா­ரத்­திற்கு வந்­துள்ள புதிய அர­சாங்கம் அதற்­கான நட­வ­டிக்­கை­களில் உறு­தி­யா­கவும் துணி­க­ர­மா­கவும் செயற்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால் அது நடை­பெ­ற­வில்லை.

இதனை சர்­வ­தேச மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள் தொடக்கம், ஐ.நா. மன்றம் மற்றும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன், சர்­வ­தேச நாடுகள் பலவும் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு இடித்­து­ரைத்­தி­ருக்­கின்­றன.

.இருந்த போதிலும், நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறுப்பு கூறும் விட­யங்­களில் ஆமை வேகத்­தி­லேயே அரசு செயற்­பட்டு வரு­கின்­றது.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய நலன்­களில் உரிய கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை. இதனால், நல்­லாட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கு உறு­து­ணை­யாக வாக்­க­ளித்­தி­ருந்த சிறு­பான்மை இன­மக்­களும் அதி­ருப்­தி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

அர­சி­யல் ஸ்­தி­ரத்­தன்­மைக்கு நல்­ல­தல்ல

இந்த அதி­ருப்­தி­யா­னது நாளுக்கு நாள் மோச­ம­டைந்­த­தை­ய­டுத்து, கடந்த ஆறு மாதங்­க­ளாக இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள தமது காணி­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கான போராட்­டமும், வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்­ப­தற்­கான போராட்­டமும் தமிழர் தரப்பில் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுடைய போராட்டங்கள் அரசாங்கத்தைப் போலவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைமையில் உள்ளவர்களினால் முதலில் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆயினும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தமது உறுதியைக் கைவிடவில்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வரையில் தமது போராட்டத்தை முன்னெடுப்பதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்பட்டு வருகின்றார்கள்.

இராணுவத்தின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தைக் குறைத்தல், நீண்ட காலமாக நீதி விசாரணைகளின்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூறுதல் போன்ற எரியும் பிரச்சினைகளில் வெறுமனே வாய்வழி உத்தரவாதங்களே அரசாங்கத்தினாலும், ஜனாதிபதியினாலும் வழங்கப்படுகின்றன.

இந்த இழுத்தடிப்பு போக்கு காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்து செயற்பட்டதுடன், நல்லாட்சி அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தமிழ் மக்களுடைய பிரச்சினைகளைத் தொய்வு நிலையில் கையாண்டு வந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் பொறுமையும் நம்பிக்கையும் இழந்தவராகக் காணப்படுகின்றார்.

யுத்த மோதல்கள் காரணமாகவும், யுத்தம் முடிவுக்கு வந்தபின்னரும், தேசிய அளவிலான சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாகவும், பெரும்பான்மை இன மக்களும் சிறுபான்மை இன மக்களும் மேலோட்ட அரசியலில் இரு கூராகப் பிரிந்திருக்கின்றார்கள். இந்த இருதரப்பிலுமே அரசாங்கம் இப்போது தனது ஆதரவை இழந்து வருகின்ற போக்கு தலைதூக்கியிருக்கின்றது. இது, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு நல்லதல்ல.

செல்வரட்னம் சிறிதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*