meendum

மீண்டும் மிரட்டும் பயங்கரவாத சாயம் – (சமகாலப் பார்வை)

கொக்­குவில் பகு­தியில் கடந்த 30ஆம் திகதி இரண்டு பொலிஸார் மீது நடத்­தப்­பட்ட வாள்­வெட்டுத் தாக்­கு­தலை அடுத்து, மறுநாள் யாழ்ப்­பாணம் சென்­றி­ருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­தர, அங்கு வெளி­யிட்ட சில கருத்­துக்கள் சர்ச்­சைக்­கு­ரி­ய­ன­வாக மாறி­யி­ருக்­கின்­றன. முத­லா­வது, பயங்­க­ர­வாதம் இன்­னமும் முற்­றாக அழிக்­கப்­ப­ட­வில்லை என்று சிவில் பாது­காப்புக் குழுக்­களின் கூட்­டத்தில் அவர் வெளி­யிட்ட கருத்து.

இரண்­டா­வது, வடக்கில் நிலை­மை­களைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வரத் தேவைப்­பட்டால் முப்­ப­டை­களின் உதவி பெறப்­படும் என்று ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் அவர் கூறிய கருத்து. இந்த இரண்டும், வடக்கின் சூழ்­நி­லைகள் தொடர்­பாக அவ­ரது நிலைப்­பாடு பற்­றிய பல்­வேறு சந்­தே­கங்­களை எழுப்­பு­கி­றது. அது­மாத்­தி­ர­மன்றி, வடக்கில் அண்­மையில் நடந்த சில சம்­ப­வங்கள் பற்­றிய சந்­தே­கங்கள், கேள்­வி­களை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தா­கவும் இருக்­கி­றது.

இலங்­கையில் பயங்­க­ர­வாதம் முற்­றாக அழிக்­கப்­பட்டு விட்­டது என்று 2009ஆம் ஆண்­டி­லேயே அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்தார்.

அதற்குப் பின்­னரும், அர­சாங்கத் தலை­வர்கள், அதி­கா­ரிகள் அனை­வ­ருமே, பயங்­க­ர­வாதம் முற்­றாக அழிக்­கப்­பட்டு விட்­டது என்று தான் கூறி வந்­தனர். சர்­வ­தேச அரங்­கிலும் அர­சாங்கம் இதனை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்தி, உரிமை கோரியும் வந் தது.

ஆனால் திடீ­ரென, இப்­போது பொலிஸ் மா அதிபர், பயங்­க­ர­வாதம் முற்­றாக அழிக்­கப்­ப­ட­வில்லை, அவ்­வாறு கூறப்­ப­டு­வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடி­ய­வில்லை, முற்­றாக அழிக்­கப்­ப­டாத பயங்­க­ர­வாதம் எங்கோ ஒரு மூலையில் இருந்து முளைத்துக் கொண்டு தான் இருக்கும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது இந்தக் கருத்து வடக்கின் தற்­போ­தைய சில சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டது போலவே தோன்­று­கி­றது. யாழ்ப்­பா­ணத்தில் கடந்த மாதம் நடந்த சில சம்­ப­வங்­களை அவர் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­ப­டுத்­து­கி­றாரா என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

விடு­தலைப் புலி­களின் முன்னாள் போரா­ளி­களே இத்­த­கைய சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் இருப்­ப­தாக பொலிஸ் தரப்பில் உட­ன­டி­யா­கவே வெளி­யி­டப்­படும் அவ­ச­ரத்­த­ன­மான கருத்­துக்கள் இந்த சந்­தே­கங்­களை வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

வட­ம­ராட்சி கிழக்கில், சட்­ட­வி­ரோத மணல் அகழ்வைத் தடுக்க முயன்ற கட­ லோரக் காவல் படை­யினர் தாக்­கப்­பட்­டமை, நல்­லூரில் நீதி­பதி இளஞ்­செ­ழி­ய னின் பாது­காப்பு அதி­காரி ஒருவர் சுடப்­பட்டு மர­ண­மா­னது மற்றும் ஒருவர் காய­ம­ டைந்­தமை, கொக்­கு­விலில் இரண்டு பொலிஸார் வாள்­வெட்­டுக்கு இலக்­கா­கி­யமை ஆகிய மூன்று பார­தூ­ர­மான சம்­ப­ வங்­களே அண்­மையில் இடம்­பெற்­றி­ருந்­ தன. இந்த மூன்று சம்­ப­வங்கள் நடந்த கோணங்கள், சூழல்கள், சம்­பந்­தப்­பட்ட நபர்கள் என்­பன ஒன்­றுக்­கொன்று தொடர்­பில்­லா­தவை. படை­யினர் மற்றும் பொலிஸார் இலக்கு வைக்­கப்­பட்­டமை என்ற ஒற்றைக் கார­ணியைத் தவிர, மற்­றெல்லா விட­யங்­க­ளிலும் முரண்­பா­டுகள் இருக்­கின்­றன.

வட­ம­ராட்சி கிழக்கில் கட­லோரக் காவல் படை­யினர் தாக்­கப்­பட்­ட­மைக்குக் காரணம், சட்­ட­வி­ரோத மணல் அகழ்வில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும், லொறி­யையும் அவர்கள் தடுத்து வைத்­தி­ருந்­த­மை­யாகும். ஏற்­க­னவே மணல் ஏற்றிச் சென்ற லொறி மீது பொலிஸார் சுட்டு ஒருவர் இறந்­தி­ருந்த சூழலில் தான் இந்தச் சம்­பவம் நிகழ்ந்­ததே தவிர, இது ஒரு திட்­ட­மிட்ட தாக்­குதல் அல்ல.

நல்­லூரில் நீதி­பதி இளஞ்­செ­ழி­யனின் பாது­கா­வலர் கொல்­லப்­பட்ட சம்­பவம் கூட திட்­ட­மிட்ட தாக்­குதல் அல்ல என்றே பொலிஸ் தரப்பு கூறு­கி­றது, பொலிஸ் மா அதி­பரும் அத­னையே கூறி­யி­ருந்தார்.

கொக்­கு­விலில் நடந்த வாள்­வெட்டில் இரண்டு பொலிசார் படு­கா­ய­ம­டைந்­தமை திட்­ட­மிட்ட ஒரு தாக்­கு­தலா என்ற கேள்வி இருக்­கி­றது .ஆனாலும் அது பொலி­சாரை குறி­வைத்து நடத்­தப்­பட்­டுள்ள தாக்­குதல் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இந்த மூன்று தாக்­கு­தல்­களின் நோக்­கங்கள், சம்­பந்­தப்­பட்ட நபர்கள், நடந்த சூழல்கள் என்­பன வெவ்­வே­றா­ன­வை­யாக இருந்­தாலும், இவை அனைத்­தையும், முன்னாள் போரா­ளி­களின் செயல்கள் என்ற ஒரே புள்­ளியில் இணைப்­ப­தற்கு பொலிஸ் தரப்பு அவ­ச­ரப்­ப­டு­கி­றதோ என்ற சந்­தேகம் இருக்­கி­றது.

பயங்­க­ர­வாதம் பற்றி பொலிஸ் மா அதிபர் வெளி­யிட்­டுள்ள கருத்­துகள், இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்­ட­தாக இருக்கும் என்றே கரு­தவும் தோன்­று­கி­றது. தற்­செ­ய­லா­கவும், சில­வே­ளை­களில் திட்­ட­மிட்டும் நடத்­தப்­பட்­டுள்ள ஒரு சில சம்­ப­வங்­களை மாத்­திரம் வைத்துக் கொண்டு, இவற்றை பயங்­க­ர­வாதம் என்ற அடை­மொ­ழிக்குள் கொண்டு வர பொலிஸ் தரப்பு எத்­த­னிக்­கி­றது.

இவை­யெல்லாம் பயங்­க­ர­வாதம் என்றால், கொக்­கு­விலில் பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் இரண்டு பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் மர­ண­மான சம்­பவம்,

வட­ம­ராட்சி கிழக்கில் மணல் ஏற்றிச் சென்ற லொறி மீதான துப்­பாக்கிச் சூட்டில், ஒருவர் கொல்­லப்­பட்ட சம்­பவம் என்­ப­ன­வற்றை, அரச பயங்­க­ர­வாதம் அல்­லது பொலிஸ் பயங்­க­ர­வாதம் என்று பொலிஸ் மா அதிபர் ஏற்­றுக்­கொள்­வது தான் நியா­ய­மா­னது.

பயங்­க­ர­வாதம் பற்­றிய பொலிஸ் மா அதி­பரின் கருத்­துக்­களும், அவர் ஊடக மாநாட்டில் வெளி­யிட்ட முப்­ப­டை­க­ளையும் கள­மி­றக்­கு­வது பற்றி வெளி­யிட்ட கருத்­துக்­களும், ஆபத்­தான நிலை ஒன்றை நோக்கி வடக்கு சென்று கொண்­டி­ருக்­கி­றதோ என்ற அச்­சத்தை எழுப்­பி­யி­ருக்­கி­றது.

வடக்கில் சில­கா­ல­மாக காணப்­பட்ட அமைதி நிலை அண்­மைய சில சம்­ப­வங்­களால் குழப்­பப்­பட்­டி­ருக்­கி­றது. ஆங்­காங்கே சில சம்­ப­வங்கள் நடந்து, அதன் விளை­வாக, பொலிஸ் மற்றும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் தேடு­தல்கள், சுற்­றி­வ­ளைப்­புகள், சோத­னைகள் என்று கெடு­பி­டிகள் நடத்­தப்­படும் நிலை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

மொத்­தத்தில் யாழ்ப்­பா­ணத்தின் இயல்பு நிலை திட்­ட­மிட்டு குழப்­பி­ய­டிக்­கப்­படும் சூழல் ஒன்று உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இதற்குப் பின்னால் இருப்­பது யார், என்ற கேள்­விக்கு விடை இல்லை. ஆனால், யாரோ ஒரு தரப்பு அல்­லது ஒன்­றுக்கு மேற்­பட்ட தரப்­புகள் இந்தச் சூழலை விரும்­பு­கின்­றன, இதனால் நன்மை அனு­ப­விக்க எத்­த­னிக்­கின்­றன என்­பது மாத்­திரம் வெளிப்­ப­டை­யாக இருக்­கி­றது.

முப்­ப­தாண்டுப் போரின் போது, முப்­ப­டை­யி­ன­ராலும் பொலி­சா­ரி­னாலும், வடக்கு, கிழக்கு மக்கள் அனு­ப­வித்த துன்­பங்­களும் துய­ரங்­களும் கொஞ்­ச­நஞ்­ச­மல்ல. இன்று வடக்கில் இருந்து இரா­ணு­வத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து வலி­யு­றுத்­தப்­ப­டு­வ­தற்குக் கார­ணமே, கடந்­த­கால கசப்­பான அனு­ப­வங்கள் தான்.

போரைக் காரணம் காட்டி தமிழ் மக்கள் மீது ஏவி விடப்­பட்ட வன்­மு­றைகள், சர்­வ­தேச அளவில் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருப்­பதால் தான், இது­கு­றித்து கலப்பு நீதி­மன்றப் பொறி­மு­றையின் ஊடாக விசா­ரிக்க வேண்டும் என்று ஐ.நாவில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­கின்ற நிலை ஏற்­பட்­டது.

முப்­ப­தாண்டு போர்க்­கா­லத்­திலும் போருக்குப் பின்­னரும் முப்­ப­டை­க­ளி­னாலும் தமிழ் மக்கள் அடைந்த பாதிப்­பு­க­ளுக்கு அள­வே­யில்லை. இந்த நிலையில், மீண்டும் முப்­ப­டை­களைக் கள­மி­றக்கி நிலை­மை­களைக் கட்­டுப்­பாட்டில் கொண்டு வருவோம் என்று பொலிஸ் மா அதிபர் கூறி­யி­ருப்­பது அதிர்ச்­சியைத் தரக் கூடி­யது.

முப்­ப­டை­யி­னரைக் கள­மி­றக்­கினால் என்ன நடக்கும் என்­பதை தமிழ் மக்கள் கடந்த காலங்­களில் கண்­டி­ருக்­கி­றார்கள். வடக்கில் நடந்­தது போல தெற்­கிலும் எத்­த­னையோ சம்­ப­வங்கள் நடக்­கின்­றன. ஆனால் அதற்­கெல்லாம் பயங்­க­ர­வாத சாயம் பூசு­வ­தற்கு பொலிஸ் தரப்பு தயா­ரில்லை. அங்­கெல்லாம் முப்­ப­டை­களைக் கள­மி­றக்க நேரிடும் என்று பொலிஸ் மா அதிபர் எச்­ச­ரிக்­க­வு­மில்லை.

வடக்கில் சில சம்­ப­வங்கள் நடந்­ததும், இந்த எச்­ச­ரிக்­கைகள் விடுக்­கப்­பட்­டதை சாதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடி­ய­வில்லை. இதற்குப் பின்னால் ஏதேனும் சதித்­திட்­டங்கள் உள்­ள­னவா என்று கூட சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

வடக்கில் மீண்டும் முப்­ப­டை­யி­னரை கள­மிற்கும் நோக்கில் தான் இவை­யெல்லாம் செய்­யப்­ப­டு­கின்­ற­னவோ, அத்­த­கைய தூண்­டு­தல்­களின் பேரில் தான் தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­ற­னவோ என்று கூட சந்­தே­கிக்க வேண்­டி­யுள்­ளது.

வடக்கில் முப்­ப­டை­யினர் கள­மி­றக்­கப்­பட்டால், தமிழ் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வார்கள். அதேவேளை, இதனை வைத்து குளிர்காயக் கூடிய தரப்புகளாக, இரண்டு பக்கமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

பொலிசார் மற்றும் படையினர் திட்டமிட்டு தாக்கப்பட்டனரோ இல்லையோ, இந்தச் சம்பவங்களி்ன் எதிர்விளைவுகள் மிக மோசமானவையாகவும் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையாகவும் இருக்கின்றன.

வடக்கில் அமைதியான சூழலும் தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்கக் கூடிய சூழலையும் விரும்புகின்ற எந்தச் சக்திகளும் இத்தகைய தூண்டுதல் செயற்பாடுகளில் ஈடுபட வாய்ப்பில்லை. மீண்டும் ஓர் அரச பயங்கரவாத சூழலுக்குள் வடக்கை இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற தரப்புகள் தான் இதனால் இலாபமடையக் கூடியவை. பொலிஸ் மா அதிபரின் எச்சரிக்கைக்குப் பின்னராவது, இத்தகைய சூழலைப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், ஆபத்தை விலைக்கு வாங்கியதாகி விடும்.

– என். கண்ணன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*